பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

சுந்தர சண்முகனார்


என்பதற்கு நாம் ஒரு வகை விளக்கம் சொல்வோமே! இறந்த காலமும் நிகழ்காலமும் சந்திக்கும் நேரம் நிகழ்காலம் ஆகும்-எதிர் காலத்திலிருந்து இறந்த காலம் பிரியும் நேரம் நிகழ்காலம் ஆகும்-என்று சொல்லலாமே! நிகழ்வு உண்டு என்ற அடிப்படையுடன் நிகழ்வது தழீஇய எச்சஉம்மைக்கு வருவோம்:

‘உம்’ என்பதன் பொருள்கள்:

தொல்காப்பியர் தம் தொல்காப்பியம் - சொல்லதிகாரம் இடையியலில்

“எச்சம் சிறப்பே ஐயம் எதிர்மறை
முற்றே எண்ணே தெரிநிலை ஆக்கம் என்று
அப்பால் எட்டே உம்மைச் சொல்லே” (1)

என, ‘உம்’ என்னும் இடைச்சொல்லுக்கு எட்டுப் பொருள்கள் இருப்பதாக அறிவித்துள்ளார்.

இந்த எட்டனுள் நமக்கு வேண்டிய ‘எச்சம்’ என்னும் பொருளை மட்டும் எடுத்துக் கொள்வோம். இதற்கு உரையாசிரியர்கள் தரும் எடுத்துக்காட்டு விளக்கம் வருமாறு:

இளம்பூரணர்: சாத்தனும் வந்தான் என்றால், அவனையன்றிப் பிறரையும் வரவு (பிறர் வரவையும்) விளக்குமாகலின், அஃது எச்ச உம்மை.

சேனாவரையர்: சாத்தனும் வந்தான் என்னும் உம்மை கொற்றனும் வந்தான் என்னும் எச்சங் குறித்து நிற்றலின் எச்ச உம்மை. கொற்றவனும் வந்தான் என்பதூஉம், இறந்த சாத்தன் வரவாகிய எச்சங்குறித்து நிற்றலின் எச்ச உம்மை.

தெய்வச்சிலையார்: எச்சம் இறந்தது தழீஇயதும் எதிரது தழீஇயதும் என இருவகைப்படும். சாத்தனும்