பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

135


வந்தான் என்றவழி, முன்னொருவன் வரவு குறித்தானாயின் இறந்தது தழீயதாம்: பின்னொருவன் வரவு குறித்தானாயின் எதிரது தழீஇயதாம். ஏனையொழிந்த பொருளைக் குறித்தமையான் எச்சமாயிற்று.

பவணந்தியார் தம் நன்னூல்-சொல்லதிகாரம் இடையியலில்

“எதிர்மறை சிறப்பு ஐயம் எச்சம் முற்று அளவை
தெரிநிலை ஆக்கமோடு உம்மை எட்டே”(6)

என ‘உம்’ என்னும் இடைச்சொல்லுக்கு எட்டு பொருள் கூறியுள்ளார், ‘உம்’ என்பதே ‘உம்மை’ எனப்படுகிறது.

இந்த எட்டனுள் ஈண்டைக்கு வேண்டிய ‘எச்சம்’ என்பதற்கு மட்டும் உரையாசிரியர்கள் கூறியிருப்பனவற்றைக் காண்போம்.

மயிலைநாதர்:- சாத்தனும் வந்தான் என்பது எச்சம்; அவனையேயன்றிப் பிறரையும் வரவு (பிறர் வரவையும்) விளக்கலின்,

சங்கர நமச்சிவாயர்:- சாத்தனும் வந்தான் என்பது கொற்றன் வந்ததன்றி என பொருள்படின் இறந்தது தழீஇய எச்ச உம்மை. கொற்றனும் வருவான் எனப் பொருள்படின் எதிரது தமீஇய எச்ச உம்மை.

காண்டிகை உரை:- எச்சம் இறந்தது தழீஇய எச்சமும் எதிரது தழீஇய எச்சமும் இருவகைப்படும். சாத்தனும் வந்தான் - இங்கே, கொற்றன் வந்ததன்றி, என்னும் பொருளைத் தந்தால் இறந்தது தழீஇய எச்சம்; இனிக் கொற்றனும் வருவான் என்னும் பொருளைத் தந்தால் எதிரது தழீஇய எச்சம்.

தொல்காப்பிய உரையாசிரியர்கட்குள் தெய்வச்சிலை யாரும், நன்னூல் உரையாசியர்கட்குள் சங்கர நமச்சிவாயர்