பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

சுந்தர சண்முகனார்


நன்கு எடுத்து விளக்கும் வல்லமையும் (Teaching Ability) நிலமும் மலையும்போல் தக்க பயனனிக்கும் நிலைத்த மாண்பும், தராசு போன்ற நடுநிலைமையும், மலர் போன்ற இனிய முகமலர்ச்சியும், பரந்த உலகியல் அறிவும், உயர் குணமும் இன்னபிற நற்பண்புகளும் உடையவர்களே நூல் கற்பிப்பதற்குரிய நல்லாசிரியர்கள் ஆவார்கள் என்று நன்னூல் நவில்கிறது; இதனை,

“குலன் அருள்தெய்வம் கொள்கை மேன்மை,
கலைபயில் தெளிவு, கட்டுரை வன்மை,
நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்,
உலகியல் அறிவோடு, உயர்குணம், இணையவும்
அமைபவன் நூலுரை ஆசிரியன்னே,”

என்னும் நன்னூல் பாவால் அறியலாம்.

மேலும் ஆசிரியர் பணிக்கு அருகர் அல்லாதவர் பற்றியும் நன்னூல் நவில்கிறது; அது வருமாறு:-

“மொழிகுணம் இன்மையும், இழிகுண இயல்பும்,
அழுக்காறு அவாவஞ்சம் அச்ச மாடலும்,
கழற்குடம் மடற்பனை பருத்திக் குண்டிகை
முடத்தெங்கு ஒப்பென முரண்கொள் சிந்தையும்
உடையோர் இலர் ஆசிரியர் ஆகுதலே.”

என்பது பா.

இனி, ஆசிரியர் பாடம் கற்பிக்க வேண்டிய முறை பற்றி நன்னூல் நவில்வதைக் காண்போம்.

பாடம் கற்பிக்கும் முறை

ஆசிரியர் பயிற்றும் முறையில் (Method of Teaching) வல்லவராய் இருத்தல் வேண்டும். உணவை நன்றாகச் சமைக்கவில்லையெனில், உண்பவர் எவ்வளவு பசியாயிருப்பினும் எவ்வாறு சுவைத்து உண்ண முடியும்? எனவே,