பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

143


‘கூலிக்கு மாரடித்தல்’ என்றபடியில்லாமல், ஆசிரியர்கள் பொறுப்புடனும் சுவையுடனும் கற்பிக்க வேண்டும். எவ்வெப் பாடத்தை எவ்வெந் நேரத்தில் கற்பிக்க வேண்டுமோ - அவ்வப் பாடத்தை அவ்வந் நேரத்தில் கற்பிக்க வேண்டும். பாடங் கற்பிக்கும் வகுப்பறை நல்ல சூழ்நிலை யுடையதாயிருக்க வேண்டும். ஆசிரியர் தக்க இடத்தில் இருந்து தெய்வம் வாழ்த்திப் பாடம் தொடங்க வேண்டும். கற்பிக்க வேண்டிய பாடத்தை முன்கூட்டித் தயாரித்து உள்ளத்தில் அமைத்துக் கொள்ள வேண்டும். விரையாமல், மாணாக்கர் அனைவரும் பின்பற்றித் தொடரும் அளவில் கற்பித்தல் நடைபெற வேண்டும். ஆசிரியர் எவர்மேலும் சினங் கொள்ளாமல், விருப்பத்துடன் - அன்புடன் - முகம் மலர்ந்து கற்பிக்க வேண்டும். எவ்வாறு கற்பித்தால், கேட்கும் மாணவர்கள் புரிந்து கொள்வர், என்பதை அறிந்து அவர்களின் உள்ளத்தில் புரிந்து பதியும்படி கற்பித்தல் வேண்டும். மந்தமான மாணாக்கர் சிலர் இருப்பர்; அவர்கள் மேலும் மற்ற எவர்பாலும் மன மாற்றமோ - வெறுப்போ கொள்ளாமல் அன்புடன் நூல் கற்பிக்க வேண்டும். இந்தக் கருத்துக்கள் அடங்கிய நன்னூல் பா வருமாறு:

பாடம் கற்பிக்கும் முறை

“ஈதல் இயல்பே இயம்புங் காலைக்
காலமும் இடனும் வாலிதின் நோக்கிச்
சிறந்துழி யிருந்துதன் தெய்வம் வாழ்த்தி
உரைக்கப் படும்பொருள் உள்ளத் தமைத்து
விரையான் வெகுளான் விரும்பிமுக மலர்ந்து
கொள்வோன் கொள்கை அறிந்துஅவன் உளங்கொளக்
கோட்டமில் மனத்தின் நூல் கொடுத்தல் என்ப.”

என்பது நூற்பா. இந்த நூற்பாவிலும் ‘வெகுளான் விரும்பி முகமலர்ந்து’ என்னும் பொருள் பொதிந்த தொடரில்,