பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

151


வேண்டும். அவற்றுள் விளங்காமல் இருப்பதையும் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். மறுநாள் ஆசிரியரை அடைந்து அவற்றைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். மாணவன் ஒரு நூலை ஒரு முறை பாடங் கேட்டதோடு விடக் கூடாது. எங்ஙனமாயினும் முயன்று மற்றொருமுறை கேட்பது நலம். அங்ஙனம் இருமுறை கேட்டால், அந்நூலில் பெரிதும் பிழை படாமல் புலமை உள்ளவன் ஆவான்; மூன்றாவது முறையும் பாடங் கேட்பானேயாயின், தானே பிறர்க்குப் பாடஞ் சொல்லக்கூடிய முறைமையினையும் உணர்ந்து கொள்வான் என்பது உறுதி.

கால்பங்குப் புலமை

ஆனால், ஆசிரியர் சொல்லும் பாடங்களை எத்துணை முறை ஊக்கத்தோடு கேட்பினும், அந்நூல்களில் கால்பங்குப் புலமைத்திறம் பெற்றவனாகவே கருதப்படுவான்.

அரைபங்குப் புலமை

ஆசிரியரிடம் பன்முறை பாடங் கேட்டதோடு அமைந்து விடக்கூடாது. தன்னைப் போன்ற மற்றைய மாணவர்களோடு சேர்ந்து பழகியும் படிக்க வேண்டும். தனக்குத் தெரியாதனவற்றை அவர்களை வினாவித் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தெரியாமல் வினாவுவனவற்றையும்தான் அவர்கட்குத் தெரிவிக்க வேண்டும். இங்ஙனம் ஒருவர்க்கொருவர் ஆராய்ந்து கற்றுப் பரிமாறிக் கொள்ளவேண்டும். இம்முறையில் ஒரு கால் பங்குப் புலமை உண்டாகும். ஆகவே, இதுகாறும் கூறியவற்றால் மாணவன் அரைப் பங்குப் புலமையைப் பெற்றுவிடுவான் என்பது உறுதி.

முழுப் புலமை

பின்பு, தானே ஓர் ஆசிரியனாக அமர்ந்து மாணவர் பலர்க்குப் பன்முறை பாடங் கற்பிக்க வேண்டும். இம்