பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

159


அவை பின்னர் மறைந்து போயின- என்று கூறித் தனிச் சொற்கட்குப் பிறப்பு தந்து பிறகு இறப்பும் தந்து விடுகிறார். அடுத்து-

“ஞநமவ என்னும் புள்ளி முன்னர்
யஃகான் நிற்றல் மெய்பெற் றன்றே” (27)

என்னும் நூற்பாவின் உரையில் பின்வருமாறு கூறியுள்ளார்.

“இங்ஙனம் ஆசிரியர் சூத்திரம் செய்தலின், அக்காலத்து ஒரு மொழியாக வழங்கிய சொற்கள் உளவென்று பெற்றாம். அவை இக்காலத்து இறந்தன”- என்பது உரைப்பகுதி. மற்றும், வேறு உரையாசிரியர் உரிஞ்யாது - பொருந்யாது - திரும்யாது - தெவ்யாது என்று இருமொழி எடுத்துக்காட்டுகள் தந்திருப்பது பொருந்தாது என மறுத்துள்ளார். மற்ற நூற்பாக்களின் உரைகளிலும் நச்சினார்க்கினியர் இதே பாதையைப் பின்பற்றிச் சென்றுள்ளார். இவரால் மறுக்கப்பட்டவர் இளம்பூரணரே. பின்வருமாறு இளம்பூரணர் கூறியுள்ளார்:-

2. இளம்பூரணர் உரை

“மெய்ம்மயக்கம் ஒரு மொழிக்கும் புணர்மொழிக்கும் பொதுவாகலின், மேற்கூறும் புணர்மொழி செய்கையெல்லாம் தலையாய அறிவினாரை நோக்க ஒருவாற்றால் கூறியவாறாயிற்று.”

“டறலள என்னும் புள்ளி முன்னர்

கசப என்னும் மூவெழுத் துரிய”

என்னும் தொடக்க நூற்பாவின் உரை விளக்கத்துள் மேலுள்ளவாறு இளம்பூரணர் குறிப்பிட்டுள்ளார்.

3.1 நன்னூல்

இனி மெய்ம் மயக்கம் பற்றிய நன்னூல் எழுத்தியலில் உள்ள நூற்பாக்களைக் காண்போம்: