பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

சுந்தர சண்முகனார்



மூன்று கொள்கைகள்

இலக்கணம் கற்பது தொடர்பாக மூவகைக் கொள்கைகள் உள்ளன. ஒன்று: இலக்கணம் என ஒன்று கற்பிக்கப்பட வேண்டியதில்லை. நடந்த பையன் என்பதில் ‘நடந்த’ என்பது பெயரெச்சம் என்றும், good boy என்பதில் ‘good’ என்பது adjective என்றும் தெரிந்து கொண்டுதானா மொழியைப் பேசவும் எழுதவும் வேண்டும்? தேவையில்லையே! பல நூல்களைப் படிப்பதனால் தானாக இலக்கண விதி அமைந்துவிடும். எனவே இலக்கணத்தைத் தனிப்பாடமாகக் கற்கவேண்டியதில்லை. இலக்கணம் கல்லாமலேயே சிலர் இதழ்களில் எழுதிவரவில்லையா என்பது முதல் கொள்கை.

இரண்டாவது கொள்கையாவது: இலக்கணம் என்ற ஒரு பாடம் கட்டாயம் தனியே கற்றே தீரவேண்டும். இன்றேல், மொழியை முற்றிலும் பிழையறப் பேசவும் எழுதவும் இயலாது - என்பது.

மூன்றாம் கொள்கை

இலக்கணம் வேண்டா என்பது பொருந்தாது. அது வேண்டியதே. ஆனால், இலக்கணப் பாடத்தைத் தனிப் பாடமாகக் கற்பிக்காமல், இலக்கியப் பாடங்களுடன் - அதாவது - உரைநடைப் பாடத்துடனும் கட்டுரைப் பாடத்தொடும் செய்யுள் பாடத்தோடும் இணைத்துக் கற்பிப்பதே சாலச்சிறந்தது - என்பது.

மூன்று பற்றிய தீர்ப்பு

இலக்கணப் பாடமே வேண்டா என்பதை நூற்றுக்கு நூறு ஒத்துக்கொள்ளவே முடியாது. இலக்கணம் இல்லையேல் மொழி சிதையும் - மொழி பிரியும். அடுத்து-இலக்கணப் பாடத்தைத் தனிப்பாடமாக நடத்த வேண்டா-