பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

சுந்தர சண்முகனார்


பொருளில் ‘செல்லாநிற்பர்’ என்பது கூறப்பட்டது. இது தொடர் நிகழ்காலம் (Present Tense Continuous) ஆகும். ‘ஆநில்’ என்னும் வேர்ச்சொல் தொடர்ச்சியை அறிவிக்கிறது. செல்லா நிற்பர் என ‘ப்’ எதிர்கால இடைநிலை வந்திருக்கிறதே என வினவலாம். எப்போதும் வழக்கமாக உள்ளதை எதிர்காலத்தால் சொல்வது மரபு. “இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்” என்பது தொல்காப்பிய (கிளவியாக்கம்-19) நூற்பா. இந்த நூற்பாவை நன்னூலாரும் அப்படியே தம் நூலில் (404) பெய்து கொண்டார். ஆங்கிலத்தில் ‘Would’ என்னும் துணை வினை (Auxiliary Verb) போடுவது போன்றது இது.

எனவே, உறுப்பிலக்கணம் தெரியின், சொல்லாராய்ச்சி செய்து, அதனால் பெறப்படும் சுவையை நுகர முடியும். ஆகவே, நன்னூலில் உள்ள உறுப்பிலக்கணத்தைக் கட்டாயம் கற்க வேண்டும். இந்த அமைப்பு, சங்க காலத்தில் இல்லாமல், பின்னர் வந்த நடைமுறை இலக்கணமாகும்.

புணர்ச்சி இலக்கணம்

அடுத்து, புணர்ச்சி இலக்கணம் மிகவும் இன்றியமையாததாகும். நன்னூலில் உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல், உருபு புணரியல் என்னும் மூன்று இயல்களில் புணர்ச்சி இலக்கணம் கூறப்பட்டுள்ளது. நிலைமொழி எனப்படும் முதல் சொல்லும், வருமொழி எனப்படும் இரண்டாவது சொல்லும் ஒன்றோடொன்று புணரும்போது-இணையும்போது, இரண்டிற்கும் இடையே ஏற்படும் நிலைமையைச் சொல்வதற்குத்தான் புணர்ச்சி இலக்கணம் என்று பெயராம். மழை பெய்தது என்னும் தொடரில் இடையே எந்த மாறுதலும் இல்லை; இது இயல்பு புணர்ச்சி. மழைக்காலம் என்னும் தொடரில் இடையே ‘க்’ என்னும்