பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

177


வல்லொற்று மிக்கிருக்கிறது; இது விகாரப் புணர்ச்சி. இந்தப் புணர்ச்சி இலக்கணம் தெரிந்தால்தான், எந்த இடத்தில் இயல்பாயிருக்கும் - எந்த இடத்தில் புதிதாய் ஓரெழுத்து மிகும் - எந்த இடத்தில் இருக்கும் எழுத்துகளுள் ஒன்று கெடும் - எந்த இடத்தில் ஓரெழுத்து இன்னோரெழுத்தாகத் திரியும் - என்னும் விதிகளை அறிந்து மொழியைப் பிழையின்றி எழுதவியலும்.

புணர்ச்சி இலக்கணமே தவறு

ஒருவகையில் புணர்ச்சி இலக்கண அமைப்பே தவறானது என்று கூறலாம். கடல் + தாவு படலம் என்பது கடறாவு படலம் என்றாகும் என்பது புணர்ச்சி விதி. முள்+தாள் - தாமரை என்பது ‘முட்டாட்டாமரை’ என்றாகும் என்பது புணர்ச்சி விதி. எல்லாப் புணர்ச்சி விதிகளும் இன்னவையே. உண்மையில் இவை சரியா? இந்த விதிகள் இலக்கணம் என்ற பெயரில் எவ்வாறு எழுதப்பட்டிருக்கக் கூடும்? ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்’ என்றபடி, மக்கள் சொற்களை இணைத்துப் பேசும் வழக்குகள், இவ்வாறு தவறான உருவங்களைப் பெறுகின்றன. இந்த அடிப்படையில், மொழி அறிஞர்கள், இன்னின்ன சொற்கள் சேரின் இன்னின்னவாறு ஆகும் என்று முடிபு கூறிவிட்டனர். இது தான் புணர்ச்சி இலக்கணம் (புணர்ச்சி விதி) எனப்படுகிறது.

இதன் பயன் என்ன? இந்த முடிவு இல்லாவிடின், மக்கள் இன்னும் பலவிதமாக நாளுக்குநாள் சிதைத்துப் பேசியும் எழுதியும் வருவர். எனவே, இப்படித்தான் எழுத வேண்டும் என முடிவு கட்டிக் கூறிவிடின், மேலும் சிதைக்காமல் பேசுவர் - எழுதுவர் ஆகவே, மொழி என்னும் ஆறு கண்டபடி ஓடாதவாறு இந்த இலக்கணக் கரை ஓரளவு காத்து வருகிறது. கால வெள்ளத்தில் இந்தக் கரை உடைபடின், மீண்டும் கரையைப் புதுப்பிக்க வேண்டி