பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

சுந்தர சண்முகனார்


இந்தப் பண்புத் தொகைப் புணர்ச்சி விதிகளை அறிஞர்கள் ஆய்ந்து நன்னூலிலிருந்து விலக்கிவிட வேண்டும்.

தொண்ணூறும் தொள்ளாயிரமும்

மற்றும் - ஒன்பது + பத்து என்பதுதான் தொண்ணூறுஎன்றாயிற்று - ஒன்பது + நூறு என்பதுதான் தொள்ளாயிரம் என்றாயிற்று எனத் தொல்காப்பியமும் நன்னூலும் கூறுகின்றன.

“ஒன்பானொடு பத்தும் நூறும் ஒன்றின்,
முன்னதின் ஏனைய முரணி, ஒவ்வொரு
தகரம் நிறீஇப், பஃதகற்றி, னவ்வை
நிரலே ணளவழி திரிப்பது நெறியே” (194)

என்பது நன்னுாற்பா. இந்தப் புணர்ச்சி விதிகள் நூற்றுக்கு நூறு தவறாகும். ஒன்பது + பத்து - ஒன்பது பத்து என்று ஓராயிரம் முறை கூறினும் தொண்ணூறு என்பது வராது. ஒன்பது + நூறு - ஒன்பது நூறு என ஒரு நூறாயிரம் முறை கூறினும் தொள்ளாயிரம் என்பது வராது. இந்த எண்களின் புணர்ச்சிகட்கும் வேறு விதிகள் உள்ளன. சுருக்கமாக அவை வருமாறு:-

தெலுங்கு மொழியில் ஏழு (7) என்பதைக் குறிக்கும் சொல் ‘ஏடு’ என்பதாகும். ஏடு என்னும் சொல்லுக்கு ‘அழுதல்’ என்னும் மங்கலமற்ற பொருளும் உண்டு. அதனால் சிலர், ஏழு (7) என்னும் எண்ணைக் குறிக்க, ‘ஏடு’ என்னும் சொல்லைப் பயன்படுத்தாமல் ‘ஆறன் ஒக்கட்டி’ (ஆறும் ஒன்றும்) என்னும் சொல்லைப் பயன்படுத்துவர். இது போலவே, தமிழில் ஒன்பது (9) என்னும் எண்ணைக் குறிக்கப் பண்டைக் காலத்தில் ‘தொண்டு’ என்னும் சொல் பயன்படுத்தப் பெற்றது. இச் சொல்லுக்கு இன்னும் வேறு பொருள்கள் உள்ளமையால் குழப்பம் உண்டாகும் ஆதலானும், குறிப்பாக இச்சொல்லுக்குப் பரத்தைமை