பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

சுந்தர சண்முகனார்


உயிருள்ள பொருள்களே. அவற்றை விதைத்தால் முளைத்து வளர்கின்றன வாதலின், அவற்றை உண்பதும் உயிர்க் கொலையே என்பது, ஒரு காலத்தில் வாழ்ந்த துறவியர்கள் சிலரின் கடுமையான கோட்பாடாக இருந்தது. அதனால் அவர்கள் காய் கனிகளின் தசைப் பகுதியை மட்டும் உண்டு, உள்ளிருக்கும் கொட்டைகளைப் போட்டு விடுவார்களாம். பச்சை இலைகளைப் பறித்தால், அவற்றையுடைய மரஞ்செடிகட்கு ஏதாவது நோக்காடு இருக்கலாம் என எண்ணித் தாமாகக் கீழே விழுந்த உலர்ந்த சருகுகளைக் கடுமையான துறவியர் உண்டு வந்தனர் என்று சொல்வதும் உண்டு.

இச் செய்திகளை எல்லாம் அடிப்படையாகக் கொண்டு நோக்குங்கால், மர வகைகளைப் பற்றிக் கவலைப்படா விடினும், மக்கள் தமக்குள்ளேயாவது ஒருவரை ஒருவர் துன்புறுத்தாமல், ஒருவர்க்கு ஒருவர் அன்பு செலுத்தி வந்தாலேயே போதும்போல் தோன்றுகிறது. எந்த உயிரையும் கொல்லாமலும் கொன்று தின்னாமலும் வாழ்பவனை எல்லா உயிர்களும் கைகூப்பித் தொழும் எனத் திருவள்ளுவர் கூறியுள்ளார்.

“கொல்லான் புலாலை மறுத்தனைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்” (260)

என்பது திருக்குறள் பாடல். கைகூப்பித் தொழும் என்பது கற்பனை நயம் செறிந்த தொடராகும்.

உயிர்கள் எல்லாமே தன்னலம் உடையவை. உயிரிகளே ஒன்றை ஒன்று கொன்று தின்பதைக் காண்கிறோம். சிங்கம் புலி-கரடி போன்றவை, மர இனம் அல்லாத பிற உயிரிகளைக் கொன்று தின்கின்றன. மாடு-மான்-யானை போன்றவை மர வகைகளை மட்டும் உண்கின்றன. இந்த அமைப்பின் காரணம் புரியவில்லை. ஆனால், மாந்தரோ