பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

187


இடைத் தொடர்க் குற்றிய லுகரங்களாக உள்ள ‘செய்து’ என்னும் வாய்பாட்டு வினையெச்சங்களில் மிகாது.

அன்று, இன்று, என்று, பண்டு, முந்து முதலிய காலப்பொருள் தரும் மென்றொடர்களில் மிகாது.

எட்டுத் தொகை, பத்துப் பாட்டு என எட்டு, பத்து என்னும் எண்ணுப் பெயர்களில் தவிர, வேறு எந்த எண்ணுப் பெயர்களிலும் மிகாது.

பொதுவாக, வன்றொடர் அல்லாத மற்ற தொடர்க் குற்றியலுகரங்களில் அல்வழியில் பெரும்பாலும் மிகாது.

தும்மு குமரா, கதவு பெரிது, அது சிறிது, இது பெரிது, எது கரியது, அவ்வளவு-இவ்வளவு-எவ்வளவு கொடுத்தார் முதலிய முற்றிய லுகரங்களில் மிகாது.

உண்ணிய சென்றான் -‘செய்யிய’ என்னும் வாய்பாட்டு வினையெச்சம், மிகாது. ஓடாக் குதிரை என்பது போன்ற ஈறுகெட்ட எதிர் மறைப் பெயரெச்சங்களில் தவிர, வேறு எந்தப் பெயரெச்சத்திலும் மிகாது.

வந்த பையன், வருகிற பையன் = தெரிநிலை வினைப் பெயரெச்சம். கரிய குதிரை, சிறிய காடு-குறிப்புப் பெயரெச்சம், ஓடாத குதிரை= எதிர் மறைப் பெயரெச்சம். வாழ்க கண்ணா, வாழிய புலவ-வியங்கோள் வினைமுற்று, ஓடு முருகா, கொடு தம்பி-முன்னிலை ஏவல் ஒருமை வினைமுற்று.

வேற்றுமை உருபுகளுள். இரண்டாவதின் ‘ஐ’, நான் காவதின் ‘கு’ ஆகிய உருபுகள் தவிர, வேறு எந்த வேற்றுமை உருபுகளிலும் மிகாது.

மகனொடு - மகனோடு சென்றார் - ஓடு, ஓடு மூன்றன் உருபுகள். மலையினின்று குதித்தான், வீட்டிலிருந்து புறப்