பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

205



கடல் தாவு படலம் என்பதனைக் கடறாவு படலம் என ஏதோ இலக்கணம் வகுத்து எழுதினர். இது தவறு. கடல் தாவு படலம் என்பதே பொருத்தம்.

தமிழ் வித்துவானும் தமிழ் முதுகலையும் (எம்.ஏ.வும்) படித்த ஒருவர் ‘இறுதி னிலை’ என்று எழுதினார். இது இவருடைய தவறு அன்று. இலக்கண ஆசிரியர்களின் தவறாகும். இலக்கண ஆசிரியர்கள், முதல் நிலை என்பது முத நிலை-முதனிலை என்றாகும் என விதி செய்தனர். இந்தத் தவறான முறையைப் பார்த்த அந்த ஆசிரியர் இறுதினிலை என்று எழுதினார். இப்படி எழுதலாமா என்று கேட்டதற்கு முதனிலை என்று எழுதும்போது, இறுதினிலை என்றுதானே எழுத வேண்டும்?- என்று அவர் கூறினார்.

இவ்விதமாக, இலக்கண விதிகள் என்னும் பெயரால் எழுதப்படும் புணர்ச்சி விதிகள் அனைத்தும் இயற்கையானவை அல்ல - செயற்கையானவையே. அவ்வளவு ஏன்? புணர்ச்சி விதிகள் என்பன எல்லாமே தவறான முடிவுகளே.

1.4 மூவகை விகாரங்கள்

மக்கள் சொற்றொடராகப் பேசுவர் என்னும் கருத்து முன்னரே சொல்லப்பட்டது. மக்கள் சொற்றொடராகப் பேசும்போது, முதலில் நிற்கும் சொல்லும் (நிலைமொழியும்), அடுத்து வரும் சொல்லும் (வரு மொழியும்) சேரும்போது இடையில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. வெள்ளி + கிழமை = வெள்ளி + க் + கிழமை = வெள்ளிக் கிழமை எனவும், திரு + அடி = திரு + வ் + அடி = திருவடி எனவும், அங்கே இல்லாத எழுத்துகள் புதிதாய்த் தோன்றுகின்றன. பொன் + தாமரை = பொற்றாமரை, நல் + நாடு = நன்னாடு என்பனவற்றில், சில எழுத்துகள் வேறு எழுத்துகளாய்த் திரிகின்றன. மரம் + வேர் = மரவேர், இளம் + நீர் = இளநீர் என்பவற்றில் எழுத்துகள் கெடு