பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

சுந்தர சண்முகனார்


கின்றன. சொற்கள் புணரும்போது ஏற்படும் மாறுதல்கள் இன்ன பிற. குளம் + வெட்டினான் = குளம் வெட்டினான் என இயல்பாக இருப்பதும் உண்டு.

1.5 பேச்சே இலக்கணம்

செயற்கைப் புணர்ச்சி முறையில் எழுதினால், இவர் இலக்கணம் படித்தவர் - இலக்கணமாக எழுதுகிறார் என்பர். ஆனால், இவை எழுத்துத் தமிழ் அல்ல - அதாவது - இலக்கியத் தமிழ் அல்ல - இவை பேச்சுத் தமிழே.

எழுத்துகள் தோன்றியும் திரிந்தும் கெட்டும் பேசப்படுகின்ற பேச்சுத் தமிழ் வழக்காறுகளே, இலக்கணம் உடையவை எனக் கருதப்பட்டு இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன.

‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்’ என்றபடி, மக்கள் எழுதத் தொடங்கியபோது, எதைப் பேசினார்களோ - எவ்வாறு பேசினார்களோ அதையே அவ்வாறே எழுதினர். இதை இதை - இப்படி இப்படியே எழுதல் வேண்டும் எனப் பின்னர் அறிவுறுத்தினர். இதற்குப் புணரியல் (மயங் கியல்) அதாவது புணர்ச்சி யிலக்கணம் என்னும் பெயர் சூட்டப் பட்டது.

1.6 நன்மையும் நோக்கமும்

இந்தப் புணரியல் செய்யும் நன்மை - அதன் நோக்கம் என்ன? மக்கள் மேலும் மேலும் மாறுதலாக எழுதாமல், இந்த அளவோடாவது ஒரே மாதிரியாய் எழுத வேண்டும். அப்படி இல்லையேல், மொழி இன்னும் மாறிக் கொண்டே போய் வேறொரு மொழி போன்ற நிலையை அடைந்து விடும் - இதற்கு இடம் தரலாகாது - என்பதுதான் புணர்ச்சி இலக்கணத்தின் நன்மையும் நோக்கமும் ஆகும். ஒரே