பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

சுந்தர சண்முகனார்



1-8 வேண்டும் புணர்ச்சிகள்

இதுபோல எல்லாப் புணர்ச்சி விதிகளையும் செய்ய வேண்டிய தில்லை. கல் +அடி என்பதை, கல் + ல் + அடி என மற்றொரு ‘ல்’ இரட்டிக்கச் செய்து கல்லடி என எழுதலாம். இது, தவிர்க்க முடியாத-ஓரளவு இயற்கையான பேச்சு வழக்காகும், தொடக்கக் காலத்தின் பேச்சு வழக்கே எழுத்து வழக்காக எழுதப்பட்டது என்பதை மீண்டும் நினைவில் கொள்ளல் வேண்டும்.

8-1 கல்லடி

இங்கே, தனிக் குற்றெழுத்தின் பக்கத்தில் மெய்யெழுத்து வந்துள்ள (கல்) நிலை மொழியின் முன், உயிர்எழுத்தை முதலில் கொண்ட (அடி) வருமொழி வருமாயின், இன்னொரு மெய்யெழுத்து இரட்டித்து வரும். இவ்விதியின் படி, கல் + அடி என்பது, கல் + ல் + அடி = கல்லடி என்றாயிற்று என விதி வகுத்திருப்பதை ஏற்றுக் கொள்ளலாம்.

ஆங்கிலத்திலும் இந்த அமைப்பு உண்டு. Big (Bi - பி, g-க் = பிக்) என்னும் தனிக் குறிலின் பின் ஒற்று வந்த நிலைமொழியின் முன், e என்னும் உயிரெழுத்தை முதலாக est (Superlative Degree) என்னும் குறயீடு வரின், இடையே மற்றொரு ‘g’ என்னும் மெய் வந்து big + g + est = biggest என்றாகும் என்னும் விதிகிடைக்கிறது. Thin + n + er = Thinner, Cut + t + ing = Cutting எனப் பல எடுத்துக்காட்டுகள் ஆங்கிலத்தில் உள்ளன.

1-8-2 காலடி

கால் + அடி = காலடி என்னும் புணர்ச்சியும் ஏற்கத்தக்கதே. கல்லடி என்பதில் கல் + ல் + அடி என ‘ல்’ இரட்டித்துள்ளது. கால் + அடி = காலடி என்பதில் ‘ல்’