பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

சுந்தர சண்முகனார்



1-8-3 பத்தடி

நிலைமொழி ஈற்றிலும் வருமொழி முதலிலும் உயிர் இருப்பின், ஏதாவது ஓர் உயிர் கெடும். பத்து + அடி என்பன இணையின் பத்தடி என்றாகும். பத்து என்பதின் ஈற்றில் (த் + உ) ‘உ’ என்னும் உயிர் உள்ளது. அடி என்னும் வருமொழியின் முதலில் ‘அ’ என்னும் வரு மொழியின் முதலில் ‘அ’ என்னும் உயிர் உள்ளது. இரண்டு உயிர்கள் உடம்பு (மெய் எழுத்து) இன்றி ஒன்றா. ஆகலின், பத்து என்பதின் ஈற்று ‘உ’ கெட, பத்த் என்று நிலை மொழி உள்ளது. இதோடு ‘அ’ சேரும்போது (த்+அ=த) பத்தடி என ஆகிறது.

இந்த அமைப்பு ஆங்கிலத்திலும் உண்டு. No + one = என்பது, ஓர் 'O' கெட்டு None என்றாயிற்று. No + ever என்பது 'O' என்றும் உயிர்கெட Never என்றாயிற்று.

பிரெஞ்சிலும் இந்த அமைப்பு உண்டு. Je + ai (I have) என்பன இணையும்போது, je என்பதின் ஈற்றில் உள்ள ‘e’ என்னும் உயிர் கெட J’ai என்னும் உருவம் உண்டாகிறது. ‘e’ கெட்டது என்பதற்கு அடையாளம் ஆக j என்பதன் பக்கதில், என்னும் ‘எழுத்தெச்சக்குறி’ (Apostrophe) இடப்பட்டு J’ai என்றாயிற்று.

1.8.4 மணியொலி

உடம்பு (மெய்) இல்லாமல் இரண்டு உயிர்கள் இணைய முடியாது என்பது உண்மைதான். அவ்வாறு இணையின், இரண்டில் ஓர் உயிர் கெடும் எனக் கண்டோம். கெடுவது (பெரும்பாலும்) நிலைமொழி ஈற்று உயிர்தான். அப்படி ஓர் உயிர் கெடவில்லையாயின், இரண்டு உயிர் களையும் இணைக்க இரண்டிற்கும் இடையிலே ஏதாவது ஒரு மெய் வரவேண்டும். எ. கா.:- மணி + ஒலி = மண் இ + ஒலி = மண் இ + ய் + ஒலி = மணியொலி. இங்கே,