பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

சுந்தர சண்முகனார்


முருகனுக்கு நண்பன் என நான்காம் வேற்றுமைப் பொருளுக்குக் கொண்டு செல்ல வேண்டுமாம். ஆனால் இது நடைமுறைக்கு ஒத்து வராது. எனவே, இதிலிருந்து தப்பிக்க, முருகனுடைய மகன், முருகனுடைய நண்பன் என ‘உடைய’ என்னும் சொல்லுருபு பயன்படுத்தப்படுகிறது. அல்லது, முருகன் வீடு, முருகன் நண்பன் எனத் தொகையாக எழுதப்படுகிறது.

1-10-1 சிக்கல்

இவ்வளவு சிக்கல் ஏன்? இங்கே ஒரு புதுத்தெளிவை ஏற்படுத்திக் கொள்ளலாம். உடைமைப் பொருள் உயர்திணையாயினும் அன்றிணையாயினும் இரண்டையும் பொதுவாகக் கருதி முருகனது வீடு, முருகனது மகன் என்று எழுதல்ாம். திருமண அழைப்பிதழ்களில் எனது மகன், எனது தம்பி என்பன போன்றனவே எழுதப்படுகின்றன்.

எனது மகன் என்றெழுதியிருந்த திருமண அழைப்பிதழ் ஒன்றை ஒருவர், திருத்தத்திற்காக என்னிடம் காட்டினர். நான், எனது மகன் என்பதை என் மகன் எனப் போட்டனுப்பினேன். எனது மகன் என முதலில் எழுதியவர் என்பதன் என்பதைப் பார்த்து விட்டு, எந்த மடையன் எனது மகன் என்பதை என் மகன் என்று போட்டான் என்று திட்டினாராம்.

1-10-2 ஆங்கிலத்தில்

இஃது இங்கனம் இருக்க, எனது மகன் என்று போடுவதையும் கூர் சீவிய இலக்கணக்காரர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்கள், ஆங்கிலத்திலும் ஆறாம் வேற்றுமையில் இது போன்ற சிக்கல் உள்ளதே - ஆங்கிலத்தில் மாறுதல் செய்ய ஒத்துக்கொள்வார்களா? - என வினவுகின்றனர். ஆங்கிலச் சிக்கலாவது:- மாணவனது