பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

221


எல்லாரும் என்பதாலும் குறிப்பிடவேண்டும் என்கின்றனர். இப்போது பலர் நாங்கள் எல்லாரும், நீங்கள் எல்லாரும், அவர்கள் எல்லாரும் என்றே எழுதுகின்றனர். தன்மைப் பன்மையின் ‘ஏம்’ விகுதியையும், முன்னிலைப் பன்மையின் ‘ஈர்’ விகுதியையும் இவர்கள் விட்டுவிட்டனர். எதிர் காலப் போக்கில், ஆர் விகுதி ஏற்ற எல்லாரும் என்பதே நிலைத்து விடும்போல் தெரிகிறது.

2-6 விகுதி மேல் விகுதி

‘உண்’ என்பது, ‘நீ உண்’ எனத் தன்வினைப் பொருளும், ‘உண்பி’ என்பது, (அவனை) உண்ணச்செய் எனப் பிற வினைப்பொருளும் தருகின்றன. நட, நடப்பி போன்றனவும் இன்னவே. இங்கே ‘பி’ விகுதி சேர்ந்து தன்வினையைப் பிறவினையாக்குவது சுவையாயுள்ளது. ஆங்கிலத்தில் இவற்றை, Make him eat, Make him walk என்பர். Make என்னும் ஒரு சொல்லின் வேலையை, தமிழில் ‘பி’ என்னும் ஓரெழுத்து ஒரு மொழியாகிய விகுதியே செய்து விடுகிறது. உண்பிப்பி என விகுதிமேல் விகுதி வரும் சொல், நீ உண் - நீ அவனை உண்ணச் செய் - என்ற பொருளைத் தராமல், நீ அவனிடம் (சமையல்காரனிடம்) சொல்லி விருந்தினரை உண்ணச்செய் என்ற பொருளைத் தருவது சுவைமேல் சுவையாயுள்ளது. ஆனால், உண்பிப்பி, நடப்பிப்பி என விகுதிமேல் விகுதி இட்டு வழங்குவது இக்காலத்தில் அருகிவிட்டது.

பழங்கால வழக்குகளாகிய என்றிசினோர், என்மனார், என்மர் என்பனவற்றிலுள்ள விகுதிகளைப் பயன்படுத்தி எழுதுவது பெரும்பாலும் இப்போது இல்லை.

2-7 உடுக்கை

சில சொற்களில் இரண்டு விதமான விகுதிகள் இருப்பதுண்டு. உடுக்கை என்பதற்கு உடுத்தல் என்று