பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

233


பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி
இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
சுவைத்தொறு அழூஉந்தன் மகத்துமுகம் நோக்கி
நீரொடு நிறைந்த ஈரிதழ் மழைக்கண் என்
மனையோள்......” (164: 1-7)

என்பது பாடல் பகுதி.

மேலே தந்துள்ள பாடல்களில் முதுமை - வறுமை ஆகியவற்றின் உயர் எல்லைகள் ஓவியப்படுத்திக் காட்டப்பட்டுள்ளன.

தன்னிலும் இளையவர்களைப்போல் தான் இயங்க முடியவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மையால், முதியவள் தன் வாழ்நாளைப் பழிக்கிறாள். குழந்தைகளும் தாயும் அழுவது, அவர்களின் வறுமையின் கொடுமையினைப் புலப்படுத்துகிறது.

முதுமையையும் வறுமையையும் புலவர்கள் சொல் ஓவியப்படுத்தியிருப்பது அவர்களின் புலமையின் வளமையை அறிவிக்கிறது. இத்தகு புலமைத் திறமையை ஒரு கலை என்று கூறலாம். இத்தகைய கலை அமைப்பு இல்லையேல், படிப்பவர்கள் பாடலை இன்புடன் சுவைத்துப் படிக்க இயலாது.

இது பாடல் கலை-அதாவது இலக்கியக் கலை மட்டும் அன்று; இதனை நாடகக் கலை என்றும் கூறலாம். இங்கே அறிவிக்கப்பட்டுள்ள முதியவள், குழந்தைகள், தாய் ஆகியோர் செயல்பட்டிருப்பதைப்போல் அப்படியே நாடகத்தில் நடித்துக் காட்டின், மக்கள் இலக்கியத்தைச் சுவைப்பது போலவே நாடகத்தையும் சுவைப்பர்.

இந்தத் துறையில், நாடகத்தையும், இலக்கியத்தையும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் எனலாம். இலக்கியத்தினும்