பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

21


இல்லாத இன்சொல் பேசினாலே, வந்தவர் பெருமை கொள்வார் - பெருமை செய்வார். இது மன்னர்க்கும் பொருந்தும்.

இக்கருத்தினைப் பொருட்பாலில் இறைமாட்சி என்னும் தலைப்பில் உள்ள

“காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்” (386)

என்னும் குறட்பா அறிவுறுத்துகின்றது. இறை எனப்படும் அரசனுக்கு இருக்க வேண்டிய மாண்புகளைக் கூறும் பகுதி இது.

காட்சிக்கு எளியன் என்னும் அணுத் தொடருக்குள் ஆழ்ந்த அகன்ற அருங் கருத்துகள் பல பொதிந்து கிடக்கின்றன. காட்சிக்கு எளியன் என்றதும், பிறருக்கு எளிதில் காட்சி கொடுப்பவன்-அதாவது-யாரும் வந்து எளிமையாய்க் காணக்கூடியவன் - எப்போதும் எந்த நேரத்திலும் வந்து எளிமையாய்க் காணக்கூடியவன் - எந்த இடத்திலும் வந்து எளிமையாய்க் காணக் கூடியவன் - என்னும் கருத்துரை நினைவுக்கு வரும்.

ஆனால், உலகியலில் பல தலைவர்களைச் சிலரே சென்று காணமுடியும்; எளிய பொது மக்கள் காணவே முடியாது. அன்றியும், குறிப்பிட்ட (Visiting Hours) நேரத்தில் மட்டுமே - குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே காண முடியும். இவர்கள் காட்சிக்கு அரியர் ஆவர். இவர்கட்கு எதிர் மாறான தலைவனே காட்சிக்கு எளியன் எனப்படுபவன்.

காட்சிக்கு எளியன் என்னும் சுரங்கத்தில் இன்னும் ஒரு புதிய பொருள் பொதிந்து கிடக்கிறது; அகழ்ந்து பார்த்தால் அகப்படும். கையில் கத்தி-கம்பு வைத்துக் கொண்டிருக்கும்