பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

சுந்தர சண்முகனார்


“ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை” (985)

“சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்” (986)

இந்த அறிவுரையை இடத்திற்கு ஏற்றாற்போல் செயல்படுத்தல் வேண்டும். மிகவும் கொடிய முரடன் ஒரு கன்னத்தில் அறைந்தால், அவனிடம் மறு கன்னத்தைக் காட்டின், அவன் காட்டுபவனை நோக்கி, ‘என்னடா, விடைக்கிறாயா’ என்று சொல்லிச் சினங் கொண்டு, மற்றொரு கன்னத்தையும் ‘பொளி பொளி’ என்று பொளிந்து தள்ளிப் பொத்தலாக்கி விடுவான். எனவே, பிறர்க்குப் பணிதல் என்னும் படைக் கலத்தையும் எண்ணிப் பார்த்துப் பயன் படுத்தல் வேண்டும்.

இந்தக் கருத்துகளை யெல்லாம் உள்ளத்தில் வைத்துக் கொண்டு உலகியலுக்கு வருவோமாயின், சில எடுத்துக்காட்டு கிடைப்பதும் மிகவும் அரிதாகும். ஏசுபிரான் தம்மைச் சிலுவையில் அறைந்தவர்களையும் பொறுத்தருளும் படிக் கடவுளை வேண்டினார். கவுதமப் புத்தர், தம்மைத் தாழ்த்தியோரைப் பதிலுக்குத் தாழ்த்தத் தம்மாணாக்கர்கள் முயன்றபோது, அவ்வாறு செய்தல் தகாது என்று தடுத்துவிட்டார். திருக்கோவலூரை ஆண்ட மெய்ப்பொருள் நாயனார், தம்மைக் கத்தியால் குத்திய முத்தநாதன் என்பவனைப் பாதுகாப்பாக ஊர் கடக்கக் கொண்டுபோய் விடும்படித் தம் ஏவலர்க்குக் கட்டளையிட்டது பெரிய புராணத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு வரலாறு. இவ்வாறு சிலவே காண்பிக்க முடியும்.

இன்றைய உலகிற்கு வருவோமாயின், புனைந்து எழுதுகிற கதைகளிலும் காப்பியங்களிலும் நாடகங்களிலும் வேண்டுமானால் இவ்வாறு சில எடுத்துக்காட்டுகளைக்