பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

சுந்தர சண்முகனார்


ஆனால் இன்று, ஏறக்குறைய எல்லா நாட்டினரும் ஒன்று சேர்ந்து உலகத்தை ஆள்கின்றனர். இங்ஙனம் எல்லாரும் ஒன்று சேர்ந்து அரசாள்வதை ‘ஒரே யுலகம்’ என்று கூறலாம்.

ஒவ்வொரு நாட்டினரும் தத்தம் நாடுகளை மட்டும் அரசாள்வது என்பது தன் நலம்! அண்டைய நாடுகளுக்கும் உதவியாய் இருந்தால்தான் உலகம் முன்னேற முடியும். ஒரு நாட்டில் குழப்பம் ஏற்பட்டால் அதனை மற்றெல்லா நாடுகளும் தீர்த்து வைக்கவேண்டும். எனவே இதன்படிப் பார்க்கையில் ஒவ்வொரு நாட்டினருக்கும் பற்று தங்கள் நாட்டின் மீது மட்டுமன்று! எல்லா நாடுகள் மீதும் உண்டு. ஒவ்வொரு நாட்டினரும் உலகப் பாதுகாப்பாளர்கள்! உலகம் உருப்பட எல்லா நாட்டினரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும். எல்லோரும் பிரிவின்றிச் சேர்ந்து ஒரே உலகமாக இருக்கவேண்டும்.

ஏறக்குறைய 200-300 ஆண்டுகளுக்கு முன்னர்கூட பல நாட்டவரும் ஒன்று சேர்ந்து ஒரே யுலகமாக இருந்திருப்பர் என்று எண்ணுவதற்கிடமில்லை. இது பற்றி இன்றும் ஐயப்பாடுகள் இருந்து வருகின்றன. இம்மாதிரியான ஐயப்பாடுகளுக்கெல்லாம் தடையாகவிருப்பதுதான் ஒரே யுலகின் தலையாய கொள்கை. இன்றுள்ள பல குடியரசுகள் போல உலகத்துப் பல நாடுகளும் ஒரே ஆட்சிக் குட்பட்டிருப்பின் ‘ஒரே யுலகம்’ என்று கூறலாம்.

இந்த ஐக்கிய நாட்டவை தினவிழாவில் இன்று நாம் எண்ண வேண்டியது என்னவென்றால், இப்பொழுது 110 நாடுகள் ஐக்கியமாகியிருக்கின்றன. இதுவே ஒரே யுலகத்திற்கு முன்னோடி.

இந்த விழாவில் நண்பர்களால் நாடகம் நடக்க விருக்கின்றது. இதற்காக அவர்கள் எத்துணையோ