பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

சுந்தர சண்முகனார்


மில்லையா? இவ்வுலகத்தின் ஊர்களுக்குச் செல்ல எனக்கேன் உத்தரவுச்சீட்டு? என்று அப்போது ஒருவன் கேட்டிருக்க இடமிருக்கிறது. இவை போன்ற வினாக்கள் எழும்பா வண்ணம் ஐக்கிய நாட்டவை பார்த்துக் கொள்கின்றது.

எத்தகைய தனிமனிதன் ஒருவனும் மற்றவர் உதவியின்றித் தனித்து வாழமுடியாது. மற்றவர் உதவிகள் தனிமனிதன் ஒவ்வொருவனுக்கும் வேண்டும்! தனிமனிதன் சமூகத்தோடு சேர்ந்து வாழாவிடின் அவனுக்கு உதவிகள் கிட்டமுடியாது. ஆகவே உலகமும் பலகூட்டு நாடுகளின் உதவியின்றி முன்னேற முடியாது.

ஒரே உலகக் கொள்கை நிலைக்குமா?

“ஒரே குடும்பத்தில் உடன் பிறந்தவர்களுக்குள்ளேயே பிணக்கு நடக்கின்றதே! அப்படியிருக்க, எல்லாரையும் ஒன்றுகூட்டி மேய்க்க முடியுமா?” என்னுங் கேள்விக்கு விடை கூறத்தான் வேண்டும்.

எல்லாரையும் ஒன்றுபடுத்திச் செயலாற்றுவதென்பது முதலில் கடினமாகத்தான் இருக்கும். பழக்கத்தில்தான் பயன் காணமுடியும். இதற்கு மக்கள் பண்பில் வளர்ச்சியிருக்க வேண்டும். எந்தவொரு கடினச் செயலையும் நாள்பட்ட நீடித்த உழைப்பால் செய்யமுடியும். மக்கட் பண்பு நல்ல முறையில் அதைச் செய்யவேண்டும்.

மனிதன் ஒரு தன்நலவாதி! ஏன் எல்லா வுயிரினங்களுமே சுரண்டும் பண்புடையவைகள்தாம்! கரப்பான்பூச்சி மற்றெரு பூச்சியை விழுங்குகின்றது. இதனை இன்னொன்று விழுங்குகின்றது. எல்லாம் தன்நலம்! தான் வாழ்ந்தால் போதும்! மற்றவர் வாழ்ந்தாலென்ன? வீழ்ந்தாலென்ன? என்ற நிலையே உள்ளது.

மனிதன் நான்கு காரணங்களால் ஓரளவு நல்ல மனிதனாய் நடமாட முடிகின்றது.