பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

47


என்ற மகுடம் இட்டு வெளியீட்டு விழாவும் நடத்துகின்றனர்.

இவ்வாறு தேவாரப் பாடல்கள் உரிய காலத்திலேயே போற்றிப் பேணப்படவில்லை. அவை அழிவதற்கும் அழிக்கப்படுவதற்கும் தக்க காரணம் இருந்தது. சமணர்களையும் பெளத்தர்களையும் எதிர்த்துப் போராட வேண்டியிருந்ததால் போற்றிக் காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் ஓலைச் சுவடிகளைத் திட்டமிட்டு அழித்திருக்கலாம்.

தமிழ் - தமிழ் - தமிழ்

தேவாரப் பாடல்கள் மூவர் தமிழ் என்று பொதுவாகக் குறிப்பிடப்பட்டன. தேவாரப் பதிகங்கள் தமிழ்மாலை என ஆசிரியர்களாலேயே அறிவிக்கப்பட்டன. நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தன் எனத் தமிழ் பரப்புவதாகச் சொல்லப்பட்டதும் உண்டு. இவ்வாறு தமிழ்-தமிழ்-தமிழ் என்று ஓலமிட்டதற்கு உரிய காரணம் யாது?

சமசுகிருதத்தின் திரிபு மொழிகளாகிய பிராகிருதம், பாலி என்னும் இரு மொழிகளில், சமணர்கள் பிராகிருத மொழியைக் கையாண்டும், பெளத்தர்கள் பாலி மொழியைப் பயன்படுத்தியும் தத்தம் சமயம் வளர்த்தனர். தேவார ஆசிரியர்களோ, அந்த மொழிகளில் மதம் மாறிய மக்கட்கு இருந்த ‘மாயை’யை அகற்றத் தெய்வத் தமிழைக் கையாண்டனர். தமிழ் மணம் எங்கும் வீசச் செய்தனர். தேவார ஆசிரியர்களும் ஆழ்வார்களும் தமிழ்-தமிழ்-தமிழ் என்று மூச்சைப் பிடித்துக் கொண்டு அடித்துக் கொண்டதில் உள்ள மறைபொருள் (இரகசியம்) இதுவே. சமசுகிருதம் - ஆங்கிலம் முதலிய மொழிகளின் மேலாட்சி ஏற்பட்ட போதெல்லாம் தமிழ்ப் புலவர்கள் தம் முன்னோரின் முறையையே பின்பற்றித் தமிழ் வளர்த்தனர். இதற்கு வழிகாட்டிகளாய் இருந்தவர்கள் தேவார-திவ்வியப் பிரபந்த