பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

சுந்தர சண்முகனார்



துப்பாக்கி என்பது சுடும் கருவி. இதை, கடும் கருவிகளுள் மிகுந்த ஆற்றல் உடையனவற்றிற்கெல்லாம் பொதுப் பெயராக - பிரதிநிதிப் பெயராகக் கொள்ளல் வேண்டும். இந்த மிகுந்த ஆற்றலைத்தான் ‘கூர்வாள்’ என்பது குறிப்பிடுகிறது. ‘கூர்’ என்பதில் அவ்வளவு ஆழ்ந்த கருத்து அடங்கி யுள்ளது.

கையில் கூர்வாள் இருந்தால் போதுமா? நன்கு பயன்படுத்த வேண்டுமே!

ஓர் ஊரில் உடன்பிறந்தார் நால்வர் இருந்தனர். அவர்களுள் மூவர் துணிவுடையவர். நாலாமவன் தொடை நடுங்கி. மிக்க வலிமையுடைய பகைவன் ஒருவனைத் துணிவுடைய மூவரும் வளைத்துக் கொண்டு தாக்கினர். அப்போது, தொடைநடுங்கி, தன் அண்ணன்மார்களை நோக்கி, அண்ணே! அவனைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொள்ளுங்கள் - நானும் ஓர் அடி அடித்துப் பார்க்க ஆசையாயிருக்கிறது - என்று கூறினானாம். இத்தகைய தொடைநடுங்கிப் பேடிகளிடம் கூர்வாள் இருந்தும் யாது பயன்? பேடி கை வாளைப்பற்றி வள்ளுவர் பின்வருமாறு கூறியுள்ளார்:

“தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்” (614)
 
“பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சுமவன் கற்ற நூல்” (727)

என்பன குறள்கள். அதனால்தான், பாவேந்தர், வீரன் என்ற சொல்லையும் கூர் என்ற சொல்லையும் அடக்கி ‘வீரனும் கூர்வாளும் போலே’ என்றார். அடுத்து மூன்றாம் பகுதி: