பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

51



வண்ணப் பூவும் மணமும்

மணம் இல்லா மலருக்கு மதிப்பு இல்லை. இத்தகைய மலர்களை, ‘இணர் ஊழ்த்தும் நாறாமலர்’ என்று குறிப்பிட்டுள்ளார் குறளார். ‘பொன்மலர் நாற்றம் உடைத்து’ என்னும் பொன்னான மொழியும் மலருக்கு மணத்தின் தேவையைக் கோடிட்டுக் காட்டியுள்ளது.

கவியரசர் ‘பூ’ என்று மட்டும் கூறவில்லை. ‘வண்ணம்’ என்னும் அடைமொழி தந்து ‘வண்ணப் பூ’ என்று குறிப்பிட்டுள்ளார். பின் வண்ணப் பூவோடு மணத்தை இணைத்துள்ளார். பூவின் வண்ணத்திற்கும் மணத்திற்கும் நோக்கம் உண்டு.

பெண் பூவில் கருப் பகுதியில் ஆண்பூவின் மகரந்தப் பொடி வந்து ‘பிற மகரந்தச் சேர்க்கை’ உண்டானால் வளமான காய் காய்க்கும். வண்டுகள் ஆண் பூக்களிலிருந்து மகரந்தப் பொடியைக் கொண்டு வந்து பெண் பூக்களின் கருப் பகுதியில் சேர்க்கும். இவ்வாறு வண்டுகள் செய்ய அவற்றை ஈர்ப்பதற்காகவே, மலர்கள் கவர்ச்சியான வண்ணங்கள் உடையனவாக உள்ளனவாம். மாலையில் மலரும் முல்லை முதலிய மலர்கள் வெண்மையா யிருப்பதற்குக் காரணம், இரவில் - இருட்டில் வெள்ளையாயிருந்தால்தானே தாம் இருப்பது வண்டுகட்குத் தெரியும் என்பதாகும். மணம் வீசுவதும் வண்டுகளை ஈர்ப்பதற்கே.

இந்த இரண்டு செய்திகளையும் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை மிகவும் அழகாகக் கூறியுள்ளார்.

“மஞ்சள் குளித்து முகம் மினுக்கி - இந்த
மாயப் பொடி வீசி நிற்கும் நிலை” (மலரும் மாலையும்)

எனச் சூரியகாந்தி என்னும் தலைப்பில் கூறியுள்ளார். மஞ்சளாயிருக்கும் சூரியகாந்தி, வண்டுகளை ஈர்ப்பதற்