பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

சுந்தர சண்முகனார்


பெருந்தன்மையைப் பற்றிப் பெரிதும் வியப்பதா? ஒன்றும் புரியவில்லையே. சரி - இருவரையுமே வியப்போம். இச்செய்தியைக் கவிஞர் என்னிடம் நேரில் கூறியபோது நான் அவரை மிகவும் பாராட்டினேன்.

பகைவனாயிருந்த என்னைப் பணிய வைத்தாற் போலவே பிரெஞ்சுக்காரக் கல்வித்துறைத் தலைவரையும் வியப்படையச் செய்துவிட்ட பாவேந்தர் பாரதிதாசனாரின் புகழ் என்றென்றும் வாழ்க. 

10. கவிஞர் கண்ட காதலர்களும்
தொழிலாளர்களும்

முழு நிலா காயும் ஒரு பருவ நாள் - இரவு நேரம்- ஒரு வெட்ட வெளி. அதில், ஒரு காதல் இணை அதாவது காதலனும் காதலியும் கை கோத்தபடிப் பேசி மகிழ்ந்து சிரித்துக் கொண்டிருந்தனர். காதலியினும் காதலன் சிறிது உயரமாக இருக்கிறான். இன்ப மயக்கத்திலே காதலியின் கூந்தல் சரிந்து கிடக்கிறது. இருவரும் மகிழ்ந்து பேசி நகைக்கும்போது, பெண்ணாதலின் காதலியின் சிரிப்பு ஒலி சிறிதாக இருந்தது. ஆண் ஆதலின் காதலன் ‘கல கல’ என உரக்கச் சிரித்தான். இந்தக் காட்சியைக் கண்ட கவிஞர் (பாவேந்தர் பாரதிதாசன்) இதைப் பின்வரும் பாடலாக வடித்துத் தந்துள்ளார்:

“வெட்ட வெளியினில் நாங்கள் - எதிர்
வேறொரு காட்சியும் கண்டோம்
குட்டைப் பனைமரம் ஒன்றும் - எழில்
கூந்தல் சரிந்ததோர் ஈந்தும்