பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

77


நழுவி விட்டாலும் விடலாம். இவ்வாறு ஏமாந்து போனவர்களின் இரங்கத்தக்க வரலாறு எத்தனையோ உண்டு. ‘தாரம் இழந்தவனைப் பெண் பார்க்க அனுப்பினால், அவன் தனக்குப் பார்ப்பான்’ என்னும் பழமொழி ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது.

எனவே, எந்தச் செயலிலும் ஈடுபடுவதற்கு முன், நன்றாகச் சிந்திக்க வேண்டும்; சிந்தித்து நல்ல முடிபாகத் தெளிவு பெறவேண்டும். இவ்வாறு செய்யின் வெற்றி உறுதி. ஆமாம். எண்ணத்தில் தெளிவுவேண்டும். வாழ்த்துகள்.

இங்ஙனம்,
உன் அன்பு நண்பன்12. பெண் தெய்வ வழிபாடு


‘கடவுள் மனிதரைப் படைத்தார்; மனிதர்கள் கடவுள்களைப் படைத்தனர்’ என்பதாக ஒரு கருத்து கூறப்படுகிறது. உயிர் இனங்கள் அனைத்திலும் ஆண் - பெண் உண்டு. எனவே, கடவுளர்களிலும் மக்கள் ஆண் - பெண் கண்டனர். இந்த இரண்டும் இன்றித் தோற்றம் இல்லை.

இந்து மதத்தில் ஆண், தெய்வங்களாகவும், பெண் தெய்வங்களாகவும் தெய்வங்கள் பல உண்டு. இவண் நாம் பெண் தெய்வ வழிபாடு பற்றிச் சில செய்திகள் காண்போம்.

இயற்கை வழிபாடு

விண், காற்று, தீ, நீர், மண் என்னும் ஐந்து முதற் பொருள்களுள், விண் விண்ணவன் - விண்மகள் - விண் மடந்தை - ஆகாச வாணி என்றும், நீர் துர்காதேவி - காவிரித்தாய் என்றும் மண் மண்மகள் - மண்மடந்தை - நில