பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

85



இவ்வாறாகப் பாவேந்தருக்கு எல்லா ஊர்களும் தம் ஊராய் இருக்கும் நிலையில், ‘பாரதிதாசன் ஊரும் பேரும்’ என்னும் கட்டுரைத் தலைப்பு தரப்பட்டுள்ளது. சுற்றி வளைக்காமல் சொல்ல வேண்டுமாயின், பாரதிதாசனாரின் ஊரின் பெயர் ‘புதுச்சேரி’ என்ற செய்தியே கிடைக்கும்.

2. ஊர்ப் பெயர்கள்

புதுச்சேரி பல பெருமைகளால் பெயர் பெற்ற ஊரெனினும், இந்தத் தலைப்பு, புதுச்சேரி என்னும் ஊரின் பேரைப் பற்றிய வரலாற்றை அதாவது ஊரின் பெயர்க் காரணத்தை எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது. (இது யான் புரிந்து கொண்டது, தலைப்பு தந்தவர் கருத்து யாதோ?) புதுச்சேரி என்னும் ஊர்ப் பெயரின் பொருள் தெளிவாகப் புரிகிறது. ஆனால், இவ்வூருக்கு அயலவர் சிலர் இட்டுள்ள பெயர்களை நோக்குங்கால் ஒரு வகைக் குழப்பம் ஏற்படுகிறது.

2.1. டேனிஷ் ஒல்லாந்து

புதுச்சேரியை டேனிஷ்காரர்கள் ‘பொல செரே’ என்றும், ஒல்லாந்து (Holland) நாட்டினர் ‘புதேஷேயிரா’ என்றும் வழங்கினார்களாம்.

2.2. பிரெஞ்சு - ஆங்கிலம்

அடுத்து, - Poudichery என்பதில் உள்ள U என்னும் எழுத்து n என்பதுபோல் தெரியும்படி, புதுச்சேரியிலிருந்து கடிதம் பிரான்சுக்குப் போகவே, அங்கிருந்த தலைவர்கள் Pondichery எனக் கொண்டு பொந்திஷெரி எனச் சொல்லவும் எழுதவும் தொடங்கி விட்டனர். இந்தப் பெயர் பிரெஞ்சுக் கூடாரத்தில் நிலைத்துவிட்டது. பிரெஞ்சிலும் இலத்தீனிலும் இலத்தினின் வழிமொழிகளிலும் ‘Q’ என்பது ‘ஒ’ எனவே