பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

சுந்தர சண்முகனார்



3-1 கடவுளர் பெயர்

தீவனூர்ப் பிள்ளையார், மயிலம் சுப்புராயர், செஞ்சி ரங்கநாதர் என்பனபோல், மணக்குள விநாயகர் என்னும் பெயரும் ஊரின் பேரால் ஏற்பட்டதே. ‘மணல் குளம்’ என்னும் பெயருடைய பகுதியில் உள்ள விநாயகர் என்பதே இதன் பொருள்.

3.2. மணல்

மணல் என்னும் சொல்லில் தொடங்கும் ஊர்கள் பல உள. மணமேடு, மணக் குப்பம், மண வெளி, மணப் பாறை, மணக்கால் முதலியன அவை. இப்பெயர்களில் ‘ல்’ கெட்டு 'மண’ என்பது நிலைமொழியாய் உள்ளது. மணல்மேடு, மணல்பாறை என்பனவே, மணமேடு, மணப்பாறை எனப்படுகின்றன. மற்ற பெயர்களும் இவ்வாறேயாம்.

3-3. குளம்

குளம் என்னும் வருமொழியால் முடியும் ஊர்ப் பெயர்களும் பல உள. வாழைக் குளம் (புதுவையின் புற நகர்ப் பகுதி இது), பெரியகுளம், தெப்பக்குளம், தல்லாகுளம், சாத்தன்குளம், மூளைக்குளம், எர்ணாகுளம், கடம்பன் குளம், காயன்குளம், கோட்டிக்குளம், தாதன்குளம், மடத்துக்குளம், கூடங்குளம், பரம்பிக்குளம், தாமரைக்குளம், தேவிகுளம், கனக செட்டிகுளம், ஊமைச்சி குளம், மாங்குளம் - முதலியன அவை.

3-4. மணல்குளம்

இவ்வாறே மணல் என்பதும் குளம் என்பதும் சேர்ந்து, இடையில் உள்ள ‘ல்’ கெட, க் என்னும் வலிமிக மணக்குளம் என்னும் பெயர் உருவாயிற்று. புதுச்சேரி நகருக்குள் உள்ள சிறப்பான இடம் ஆதலானும், பழைய சிற்றூர் ஆதலானும் இதன் பெயர்க்காரணம் ஈண்டு இடம்