பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

91


பெற்றது. இனிப் புதுச்சேரி என்பதன் பெயர்க் காரணத்தைக் காண்பாம்.

4. புதுச்சேரி

4.1. புது: புதுப்பேட்டை, புதுப்பாளையம், புது வண்டிப்பாளையம், புதுக்குப்பம், புதுவூர், புதூர், புத்தூர், புதுக்கோட்டை, புதுக்காடு, புதுச்சத்திரம், புது நகரம், புத்துச்சேரி (கேரளம்) எனப் ‘புது’ என்னும் அடிச்சொல்லில் தொடங்கும் ஊர்கள் பல உள.

4-2. சேரி

கோட்டுச்சேரி, தெளிர் (தெள்ளுச்) சேரி, தலைச்சேரி, கலமசேரி, கூடுவாஞ்சேரி, கொக்கலாஞ்சேரி, கொரடாசேரிச் கங்கணஞ்சேரி, பார்ப்பினிசேரி, மட்டஞ்சேரி, வடக்காஞ் சேரி, வேளச்சேரி, புத்துச்சேரி (கேரளம்) எனச் சேரி, என்னும் வருமொழியில் முடியும் ஊர்கள் பல உள.

4-3. புதுமை

புதுச்சேரி என்பதில் உள்ள ‘புது’ என்பது, முற்றிலும் புதிதாய் உண்டாக்கப்பட்ட சேரி என்னும் கருத்தைக் குறிக்கவில்லை; பழமையாய் இருந்த பகுதி புதுமையாகச் சீர்திருத்தப்பட்டது என்னும் கருத்தைக் குறிக்கின்றது.

புதுச்சேரி நகரின் நடுவே கலவைக் கல்லூரி என்னும் ஒரு கல்வி நிறுவனம் ‘ப’ வடிவில் உள்ளது. இதன் நடுவே ஓர் அமைப்பு கட்டுவதற்காகத் தரையைத் தோண்டியபோது மண்டை ஓடுகளும் எலும்புகளும் அகப்பட்டன. (இதை நான் நேரில் பார்த்தேன்) இந்த இடம் முன்பு இடுகாடாய் இருந்ததாகத் தெரிகிறது. பின்னர் நகர் புதுமையாய் விரிவடைந்ததால், இந்த இடுகாட்டைப் பற்றிப் பொதுமக்கள் இன்று ஒன்றும் அறிந்திலர். யானும்