பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


98 - ரசிகமணி டிகேசி

புத்தகத்தை ரொம்பவும் அனுபவித்தேன் என்ற தோரணையில் எனக்கு எழுதுகிறான். கம்பர் தரும் காட்சியை அவன் அனுபவிக்கிறது அபாரம் என்று தந்தையார் எழுதுகிறார். இலக்கிய உலகத்தில் நடக்கிற புரட்சியைப் பார்த்தீர்களா?

கம்பராமாயணத்தைப் புலவர்கள் புலவர் சிகாமணிகள் கம்பராமாயணப் பிரசங்கிகள் அனுபவிக்கவில்லை என்பது நாம் கண்கூடாகக் கண்ட காட்சி அடுத்த பாட்டு அடுத்த பாட்டு என்றார் கவிராயர். மற்றவர்கள் சங்கநூல் சங்கநூல் பெரியபுராணம் கந்தபுராணம் சிலப்பதிகாரம் பிரபுலிங்க லீலை என்றெல்லாம் பேசிவிடுகிறார்கள்.

ஆனால் 13 வயசு பையன் பொடிப்பயல்களையும் கம்பர்

வசீகரித்துவிடுகிறார் என்று கும் மாளி போட்டுச்

சொல்லுகிறான். பெண்கள் அனுபவிப்பதைப் பற்றியோ சொல்லவே வேண்டாம். ராஜேஸ்வரி சாட்சி.

இரண்டு மூன்று நாளில் எப்படியும் குற்றாலம்

வந்துவிடுவேன். பயப்பட வேண்டாம்.

- தங்கள் டி.கே. சிதம்பரநாதன்

●。ュ令 శ్య• •్య శ్మ•