இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கடிதங்கள்
103
அருமை பாப்பா, அம்மா எல்லாரும் இங்கு வந்து தங்கியதில் குறைச்சல் இல்லை. அவர்களோடு அளவளாவத்தான் சாவகாசம் இல்லாமல் போய்விட்டது என்பது ஆராய்வதற்கு உரிய காரியம்.
என்னுடைய வண்ணார்பேட்டை மேல்வீட்டுக்கு (டிவிஎஸ் ஸ்டோர்ஸ்) மேடையைக் கொஞ்சம் துப்புரவு செய்து வைத்திருந்தால் சிலர் அங்கேயும் தங்கலாம். ஆவுடையப்ப பிள்ளை அவர்களிடம் சொன்னால் ஏஜெண்டிடம் சொல்லி ஏற்பாடு செய்வார்கள்.
தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்
❖❖❖