உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

105


முகாம்

கல்கி

28.11.46


அருமை நண்பர் பாஸ்கரன் அவ்ர்களுக்கு,

26.11.46 அன்று அனுப்பிய கடிதம் கிடைத்தது. தங்கள் விஷயம் சம்பந்தமாக சத்தியமூர்த்தி அவர்களிடம் நேற்றும் கலந்து பேசினேன். நாராயணசாமி பிள்ளை அவர்களிடமிருந்து பேப்பர் வந்துவிட்டது. தாங்கள்தான் ரிவினியூ டிபார்ட்மெண்டில் வேலை பார்க்க விருப்பமா, மாஜிஸ்டீரியல் டிபார்ட்மெண்டில் வேலை பார்க்க விருப்பமா என்று குறிப்பிட்டு எழுத வேண்டும்.

ரிவினியூ டிபார்மெண்ட் என்றால் டெக்ஸ்டைல் கமிஷன் இலாகாவில் உத்தியோகம். மதுரை டிவிஷனுக்கு ஆபிசர் என்று பெயர். ஆனால் அது திருநெல்வேலி ஜில்லாவையும் உள்ளிட்டது. ஹெட் குவார்ட்டர்ஸ் திருநெல்வேலியாக வைத்துக்கொண்டுத் தாங்கள் பாளையங்கோட்டையிலேயே இருந்து கொண்டு வேலை பார்க்க வேண்டியது. இதுதான் நல்ல வேலையாம்.

இந்த வேலைக்கே ஆர்டர் போட்டு அனுப்பலாம் என்று நானே சொல்லிவிட்டேன். எதற்கும் தாங்கள் இந்தக் கடிதம் பார்த்தவுடன் கல்கிக்கு ஒரு தந்தி கொடுத்துவிடுங்கள். கல்கி எந்த விஷயத்தை ஆபிசுக்குத் தெரியப்படுத்திவிடுவார்கள். தந்தியை உடனே அனுப்ப வேண்டும்.

நாளை நின்று ஞாயிற்றுக்கிழமை இரவு இங்கிருந்து செட்டி நாட்டுக்குப் புறப்பட்டுப் போகிறேன். அங்கு இரண்டு நாள் இருந்து விட்டு வண்ணார்பேட்டை வருகிறேன். தங்களையும் ராஜேஸ்வரியையும் பார்த்துக் கொள்ளுகிறேன்.

கவிமணியின் பிரசங்கத்தைப் பற்றி நன்றாய்க் கணக்காய் எழுதியிருக்கிறீர்கள். தமிழை நான் பாராட்டுகிறேன் என்றால்