உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

ரசிகமணி டிகேசி


அதன் உபயோகத்தை நாடியோ ஏதோ தேசபக்தி பாஷை பக்தி என்னும் காரணங்கள் பற்றி அல்ல. மற்றவர்களுக்கு அப்படி எண்ண முடியவில்லை. தமிழுக்காக மட்டுமே.

மாம்பழம் ருசியாய் இருக்கிறது. சரி சாப்பிடுவோம் அனுபவிப்போம் என்பது என் கொள்கை. வேறு சிலரோ மாம்பழம் நம் மூதாதையர்கள் விளைவித்தது. மூதாதைகளும் மூதாட்டிகளும் தின்றது. நம்முடைய புனித பூமியில் விளைந்த தெய்வக்கனி. இத்தகைய மாம்பழத்தைத் தின்னாதவன் தேசத் துரோகி. காலத்தின் கொடுமை எப்படி இருக்கிறது பாருங்கள். அயல்நாட்டுப் பழங்களான ஆரஞ்சையும் ஆப்பிளையும் வாய் கூசாமல் பாராட்டுகிறார்கள். பாராட்டோடு நிற்பதில்லை. அவைகளைத் தின்னவே செய்கிறார்கள். என்ன அநீதி. இதற்கு விமோசனந்தான் உண்டா என்றெல்லாம் முழங்குவது ஒரு கொள்கை,

மேலே சொன்னபடி பேசும்போது ஒன்று தெளிவாகிறது. பேசுகிறவர்களுக்குத் தமிழில் நம்பிக்கை இல்லை. தமிழ்ப் பக்தியில் தான் நம்பிக்கை உண்டென்பது. நிற்க.

பம்பாய் நிகழ்ச்சிகளைக் கல்கியில் போடும்போது எலியை பூதக் கண்ணாடியில் வைத்து யானையாய் காட்டின கணக்குதான். பம்பாயிலுள்ள ஒரு இளைஞர் தமிழில் அவருக்கு ஒரே வெறிதான். ஆகவே எலி யானையாய்த் தோன்றுவதில் வியப்பில்லை.

மனுஷனை எலியாய் எண்ணுகிறவர்கள் ஒரு பக்கம், யானையாய் எண்ணுகிறவர்கள் ஒரு பக்கம். சராசரியாய்ப் பார்க்கும் போது மனுஷன் மனுஷனாய் தோற்றம் அளித்துவிடக்கூடும் அல்லவா.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்