பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கடிதங்கள் 9

இருக்கிறது. திருவாவடுதுறை மடத்தார் ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏண்டா, மடத்தார் இப்படி வைக்கோல் படப்பு வைரவனாய் இருக்கிறார்கள். அப்படி அருமையான நூலை வெளியிட்டால் அவர்களுக்கு என்ன குறைந்து போய்விடும் என்றெல்லாம் சைவ பக்தர்கள் புகார் சொல்லிக் கொண்டிருந்தார்கள். கடைசியாக வந்ததய்யா திராவிட மகாபாஷ்யம்.

சைவப் புலவர்கள் கிடைத்ததடா வட்டை என்று அதை வாசிக்க ஆரம்பித்தார்கள். தமிழ் வசனத்துக்கு எடுத்துக்காட்டு உரைகள் என்று பலவாறாகப் புகழவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

அவ்வளவுதான், திருநெல்வேலி தமிழ் எழுத்தாளர் எல்லாரும் சேர்ந்தது போல கோபுரம் கட்டவே ஆரம்பித்துவிட்டார்கள். ஆகையால் தாங்கள் சொன்னது உண்மையே. பூசி மெழுகிறதற்கும், பொய் சொல்லிக் கொண்டிருப்பதற்கும் காலாவதி ஆய்விட்டது.

இனிமேல் வெட்டொன்று துண்டிரண்டு என்று விஷயம் விழவேணும். தாங்கள் பேசியது ரொம்பவும் சரி.

கொஞ்சம் இந்த முறையிலேதானே கல்கியின் கதைக் கொத்து முகவுரையில் எழுதிவிட்டேன். அரும்பத அகராதிக்குள் ஊசிபோய் குத்தத்தான் செய்யும். என்ன ஆகிறது என்றுதான் பார்ப்போமே. தாங்கள் எழுதிய கடிதத்தை ரொம்பவும் அனுபவித்தேன்.

சென்ற ஞாயிற்றுக்கிழமை வி.பி.எஸ். அவர்கள் அங்கே

வந்திருப்பார்களே. பிறகு அவர்களைப் பார்க்க நேரம் வாய்க்கவில்லை.