பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


i{}8 ரசிகமணி டிகேசி

தலைமைத் தமிழ்ப் பண்டிதர் தென்காசியில் நடந்த தமிழ் விழாவில் அதிகார தோரணையோடு பேசினார். கம்பர், திருவாசகம் எல்லாம் ஒன்றும் இல்லை. பாரதிதாசன் ஒருவர்தான் கவி, மகாகவி என்று ரொம்ப ரொம்ப ஆர்ப்பாட்டத்தோடு பேசினார். தாகத்துக்கு சோடாவைத்தான் குடித்துக்கொண்டார் வேறொன்றும் இல்லை.

ஊர்மேனி அழகியானில் அவ்வூர்க்கவிஞர் சேதுரகுநாதன் பிரசங்கமே யெதிருக்கிறார். அது விஷயமாகத் தென்காசி சிதம்பரம் பிள்ளை என்று ஒருவர் கடிதம் எழுதியிருக்கிறார். தங்களுக்குமே எழுதியிருக்கிறாராம். கல்கி சொல்லுகிறமாதிரி தமிழ்க்கல்வி சம்பந்தமாக ஒரு மூன்று வருஷம் தரிசு போட்டால் நல்லது. தமிழ்க் கல்வி வெட்கக் கேடான காரியமாக இருக்கிறது. இது மாதிரிப் புகாரே திருவையாற்றிலிருந்தும் வந்து கொண்டிருக்கிறது. எல்லாப் பல்கலைகழகங்களுமே அப்படித்தான்.

தமிழ் என்று சொல்லும்போது நமக்கு எக்களிப்பு உண்டாகிறது. தமிழ்ப் பண்டிதர்கள் என்னும்போது அவமானமாய் இருக்கிறது.

மார்ச்சு மாதம் 15 வாக்கில் டில்லிக்குப் போகலாமா என்று கல்கி அவர்கள் கேட்கிறார்கள். டில்லியிலிருந்து கடிதத்துக்கு மேல் கடிதம் வந்து கொண்டிருக்கிறது. எப்படிடா போகப் போகிறோம் டில்லிக்கு என்று எண்ணிக் கொண்டிருந்தேன். கல்கியும் தமிழ்ப் பண்ணை அண்ணாமலையும் உடன் வருகிறார்கள். ஆகவே பயம் நீங்கிவிட்டது. டில்லியிலிருந்து சாந்திநிகேதனுக்குப் போக உத்தேசம். ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்களுடைய உபயமாக ரூ 2000க்கு தமிழ்ப் புத்தகங்கள் தயார் ஆகின்றன. அவைகளை நான் போய்க் கொடுக்க வேண்டுமாம். அந்தப் புத்தகங்களுக்குள் உள்ள செல்வம்