பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

ரசிகமணி டிகேசி
கல்கி
சென்னை
7.2.48

அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

பலராமுக்கு எழுதிய கடிதம் பார்த்துக்கொண்டேன். 30 ஆம் தேதி மாலை மதுரை ஸ்டேஷனில் வைத்து மகாத்மாவின் மரணச் செய்தி கிடைத்தது. மூளையைக் குழப்பிவிட்டது. சென்னைக்கு வந்து பார்த்தால் எல்லாம் ஒரே ஆற்றாமையும் குழப்பமுமாய் இருந்தது. ரேடியோவும் பத்திரிகைகளும் ஒரே புலம்பல்.

இங்கு ஒவ்வொரு மாலையும் வீட்டிலும் வெளியே சபாக்களிலும் பிரார்த்தனைக் கூட்டம். சில சமயங்களிலும் என்னையும் கலந்து கொள்ள சொல்கிறார்கள் மனசுக்கு உவந்த பாடல்களை ஆங்காங்கு எம்.எஸ். பாடத்தான் செய்கிறார்கள். அந்தப் பாடல்களிலும் சோகம் ஊறிவிடுகிறது. இப்படியெல்லாம் இருக்கும்போது கடிதம் எழுதுவது கஷ்டமாய் போய்விடுகிறது.

ராஜேஸ்வரிக்குக் கூட கடிதம் எழுதவில்லை. எழுதினாலும் அவ்வளவு பிரயோசனம் இருக்காது.

எப்படியும் 10 ஆம் தேதி வண்ணார்பேட்டை போய்ச் சேருகிறேன். ஆவுடையப்பப் பிள்ளை அவர்களுடைய குமாரத்தியின் கல்யாணம் 1 ஆம் தேதி, ராஜேஸ்வரியைப் பார்த்துக் கொள்ளுகிறேன்.

நண்பர் சின்னுதேவரை வரும்போது மதுரையில் பார்க்கலாம் என்று எண்ணி கடிதம் போட்டிருந்தேன். சரியான நேரத்தில் கடிதம் போய்ச் சேரவில்லை. ஆகையால் திரும்பும்போது சந்திக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். நல்ல குணமான பிள்ளை.