பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


i 14 ரசிகமணி டிகேசி

முகாம்

கல்கி

சென்னை

22.10.48

கம்பர் விழாவில் தாங்கள் கலந்துகொள்ளவில்லை

என்பது முதல் செய்தி. தங்களை எல்லாரும் எதிர்பார்த்தார்கள். முக்கியமாக நான் எதிர்பார்த்தேன்.

கல்கியும் சதாசிவமுமாகச் சேர்ந்து கம்பர் விழாவை வெகு சிறப்பாக, ஆயிரம் வருஷமாக இல்லாத சிறப்போடு நடத்திவிட்டார்கள். r

பத்திரிகைகாரர்கள் எல்லாரும் சேர்ந்து வேலை செய்தார்கள். ராமாயண ஏடுகளை யானை மேல் ஏற்றி ஊர்வலம் வரச் செய்தார்கள். ஊர்வலம் இரண்டு மைல் தூரம் சென்றது. ஊர்வலத்தில் நல்ல கூட்டம். எல்லாம் சிறப்புதான்.

கல்கியின் வரவேற்பு உரையும் பிரதமரின் திறனாய்வும் பிரமாதமாக இருந்தன. மிச்சம் வைக்காமலே பிரதமர் பேசினார். -

மற்றபடி சுமார் இருபது பேர் பண்டிதர்கள். ஸ்காலர்கள், கம்பராமாயண விரிவுரையாளர்கள், எல்லாரும் வந்து வந்து பேசினார்கள். தங்கள் தங்களைப் பற்றிப் பேசினார்களே ஒழியக் கம்பரைப் பற்றிப் பேசினார்கள் என்று சொல்ல முடியாது. பிரதமர், மராமத்து மந்திரி முதலானவர்கள் பாராட்டிப் பேசிய பின்பு ஸ்காலர்கள் நேர்முகமாகக் கம்பரை எதிர்த்தோ தாழ்த்தியோ திட்டியோ பேச முடியவில்லை. உள்ளத்திலிருந்த கொதிப்பைக் கொட்டிக் கொண்டார்கள். கம்பருக்கு நல்ல காலம்.

இவர்களை விட்டுவிட்டால் மூன்று தரமான பேச்சுக்கள் நிகழ்ந்தன. -