பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கடிதங்கள் 15

1. நீலாவதி அம்மை, 2 டாக்டர் திருமூர்த்தி, 3. திருமதி ஆர். வி. சாஸ்திரி அம்மாள். மூன்று பேரும் கம்பரை அபாரமாய் அனுபவித்தவர்கள். அனுபவத்தை அப்படியே கொட்டிவிட்டார்கள். ஆக பிரயோசனமாக பேச்சு மூன்று. போதாதா ஒரு விழாவுக்கு.

நானும் பலராமும் நாளை புறப்பட்டு திருச்சி போகிறோம். 24, 25 ஆம் தேதிகளில் திருச்சியில் தங்கல். 26, 27 ஆம் தேதி வண்ணார் பேட்டை 27 ஆம் தேதி யூரீவைகுண்டத்தில் குமரகுரபரசுவாமிகள் புத்தக சாலைத் திறப்புவிழா நான் திறக்க வேண்டும். 28 குற்றாலம்.

ராஜேஸ்வரி எங்கே இருக்கிறாள்? நடராஜன் காரைக்குடியில் இருப்பதாகக் கேள்வி. அப்படி இருந்தால் மிக்க சந்தோஷம். மற்றபடி அம்மாள் எல்லாரும் வேலூருக்கு வந்துவிட்டார்களா. - - -

எனக்குக் காலிலிருந்து வந்த புண் அனேகமாய் குணமாய் விட்டது. கொஞ்சம் பாக்கி இருக்கிறது. நாலைந்து நாளில் குணமாக வேண்டும் பூரணமாக,

தாங்கள் கம்பர் விழாவுக்கு வந்திருந்தால் நாலு நல்ல பேச்சைக் கேட்டிருப்பார்கள் சபையோர். -

- தங்கள் டி.கே. சிதம்பரநாதன் குறிப்பு - கல்கிக்கும் சதாசிவத்துக்கும் பாராட்டி ஒரு கடிதம் தாங்கள் எழுதவேண்டும். -

  • . *. .ళి

•్య• శి ళ్యి•