உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

ரசிகமணி டிகேசி


எனக்கும் தூத்துக்குடி போய் வரவேணும் என்று ஆசைதான். இடது தோள்பட்டையில் கொஞ்சம் வலியிருந்து கொண்டு இடைஞ்சல் செய்வதால் பிரயாணம் என்றால் கொஞ்சம் பயமாய் இருக்கிறது. சௌக்கியமாயிருந்தால் வி.பி.எஸ்.கூட நானும் வந்திருப்பேன்.

'என்னத்தை' என்ற வியாசத்தைப் பற்றி ப.ப. ஸ்ரீனிவாசய்யங்கார் அவர்கள் பிரமாதமாக எழுதியிருக்கிறார்கள். டாக்டர் சொக்கலிங்கம் பிள்ளை அவர்களுமே அதை ரொம்ப ரொம்ப அனுபவித்ததாகத் தெரிகிறது. இதிலிருந்து எனக்கு ஒரு படிப்பினை. இந்த மாதிரி கொஞ்சம் கொஞ்சம் எழுதவும் முயல வேண்டியதுதான். அது முற்றிலும் வீண் என்று ஆய்விடாது என்ற உண்மை.

செல்லையா திருவனந்தபுரம் பாங்கி, வீரராகவபுரம் பிராஞ்சில் வேலை பழகுகிறான். கிறிஸ்துமஸ் ரஜாவுக்கு சென்னை போயிருக்கிறான். இரண்டு மூன்று தினத்தில் திரும்புவான். வீட்டில் எல்லாரும் சௌக்கியமே. அவ்விடத்திலும் தாங்கள், அம்மாள் குழந்தைகள் எல்லாம் சௌக்கியம் என்று எண்ணுகிறேன்.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖