பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

ரசிகமணி டிகேசி




கல்கி
சென்னை
1.1.49

அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

அருமைக் கண்மணி ராஜேஸ்வரிக்கு அனுப்பிய கடிதம் கிடைத்திருக்கும். அவளும் நடராஜும் காரைக்குடிக்குப் புறப்பட்டுக் கொண்டிருப்பார்கள் என்று எண்ணுகிறேன். அவர்களோடு கருணாகரனும் புறப்பட வேண்டும். தங்கையும் பாளையங்கோட்டை போக வேண்டும். பிறகு அம்மாளும் தாங்களும் வேலூருந்தான்.

இப்படியாகக் குடும்பத்திலுள்ளவர்கள் வாழ்நாளில் முக்காலே மும்மாகாணி டூர் போட்டுக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. லாப நஷ்டங்களைப் பார்க்கிறதென்று ஏற்பட்டுவிட்டால் குடும்பக் கச்சவடம் மேற்படி கீழ்ப்படி என்ற கணக்குத்தான் வருகிறது. ஆனாலும் 1949 ஆம் வருஷம் மொத்தத்தில் லாபம் கொடுக்குமாறு எல்லாம் வல்ல இறைவன் அருள் செய்வாராக.

நண்பர் செளந்திரராஜன் ஞாபகத்தோடு புதுவருஷ வாழ்த்து அனுப்பியிருக்கிறார்கள். வேலூர் என்னை மறக்கவில்லை. வேலூரை நானும் மறக்கவில்லை. மிக்க சந்தோஷம்.

அன்று கொண்டு வந்த சக்கரவர்த்திக் கீரையை இங்கே எல்லாரும் அனுபவித்தார்கள். அவர்களுக்குப் புதிதாய் இருந்ததால் ருசியை வியந்தார்கள். சக்கரவர்த்திப் பட்டம் தகும் என்றார்கள்.

நல்லெண்ணையையும் அனுபவித்தார்கள். சதாசிவத்துக்கு ஒருநாள் இட்லிக்கு எண்ணெய்விட்டார்கள். இது ஏது ரொம்ப வாசனையாக இருக்கிறதே என்று சொல்லி அதற்காகவே