பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கடிதங்கள் - 127

திருக்குற்றாலம் தென்காசி 18.3.50

அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தஞ்சாவூருக்கு போனபிறகு கடிதப் போக்குவரத்தே இல்லை. டிஸ்டிரிக்ட் வெல்பேர் ஆபிசர் என்றால் வேலையும் தொல்லையும் வேண்டிய மட்டும் இருக்கத்தானே செய்யும். வேலையே இல்லாததால் எனக்கும் எழுத நேரம் இல்லை. தமிழகத்துக்கே வெல்பேர் ஆபிசர் என்று என்னை அனேகர் எண்ணிவிடுகிறார்கள். எங்கே எல்லாமோ அழைக்கிறார்கள். வரமுடியாது என்று கடிதமாவது எழுதவேண்டும்தானே.

எப்படியோ மாதங்கள் கழிந்துவிடுகின்றன.

மார்ச்சு மாதம் முதல் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டேன். வழியில் திருச்சி ரேடியோவில் பேசினேன் இலக்கணம் பற்றி.

அந்தப் பேச்சு எப்படியோ சிலருக்குப் பிடித்திருக்கிறது. கல்கி பாராட்டியிருக்கிறார்கள். திருஞானசம்பந்தம் வசந்தத்தில் அச்சிட்டிருக்கிறார். மற்றும் பலரும் நன்றாய் இருந்தது என்று சொல்லுகிறார்கள். சந்தி இலக்கணப் பண்டிதர்கள் என்ன சொல்லுவார்களோ - கண்டதார்.

ராஜேஸ்வரியும் நடராஜூம் காரைக்குடியிலேதானே

இருக்கிறார் கள். குழந்தை செளக்கியந்தானே, அம்மாள் தஞ்சையில் தானே.

எப்படியும் எல்லாரும் கம்பர் விழாவை ஒட்டிக் காரைக்குடியில் சந்தித்துக் கொள்ளலாம். 3 ஆம் தேதி காலை