பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

ரசிகமணி டிகேசி


ராஜாஜி, கல்கி, நான் மூவரும் சென்னையிலிருந்து காரைக்குடி வந்து சேருகிறோம். எங்களுக்கு ஜாகை மகளிர் இல்லத்தில்.

கம்பர் விழாவை சா. கணேசன் வெகு ஜோராய் நடத்தப் போகிறார்கள். நடத்த வேண்டும் என்று எண்ணிவிட்டால் நடத்தலாந் தானே. வந்த கூட்டத்துக்கு ஒரு பாட்டை அனுபவிக்கத் தெரிந்து விட்டு, வீட்டுக்கோ ஊருக்கோ போனால் போதும். கம்பர் விழாக்களில் ஒரு பாட்டு கூட கிடைப்பதில்லை வந்த மக்களுக்கு. இந்த வருஷம் ஏதாவது பாட்டுகள் கிடைக்குமா?

புதுப்பதிப்பு வேண்டும் என்று எல்லாருமே பேசுவார்கள். யாரும் அதுபற்றிப் பேசலாந்தானே. அப்படி ஒன்று வரும் வரையும் தொந்தரவே இல்லை. வந்தாலும் என்ன என் பதிப்பு, கோபால கிருஷ்ணமாச்சாரி பதிப்பு, சிதம்பர முதலியார் பதிப்பு இவைகளுக்கு இருக்கும் மதிப்புத்தானே. ஒருவரையும் ஒருவரும் படிக்கப் போவதில்லை. ஆனாலும் அதுவரும்வரை இப்போதுள்ள புத்தகங்களை எல்லாம் ஒதுக்கித் தள்ளிவிடலாம் அல்லவா?

இந்த செளகரியத்துக்காகத்தானா கம்பர் விழா கூட்ட வேண்டும். கம்பரை அறிமுகப்படுத்துவதற்கான விஷயம் இருந்தால் நல்லது. இருக்கிறதா என்று பார்க்கலாம், இந்த விழாவில். நாம் எல்லாரும் முக்கியமாக மகாராஜனும் தாங்களும் கம்பர் பாடல் விஷயமாகவும் கவித்துவமான அற்புத தத்துவம் சம்பந்தமாகவும் சதா ஆத்திரத்தோடும் இருக்கிறோம். அப்படித்தானே எல்லாரும் இருக்கவேண்டும். சில பண்டிதர்கள் வந்து செளடால்தனமாகக் கம்பரை ஏளனம் பண்ணிவிட்டு ஏதோ அறியா சிறுவர்களின் கைதட்டலையும் பெற்றுவிட்டு ஜெயக்கொடி பறக்கவிட்டுக் கொண்டு காம்பீர்யமாய் நடக்கிறதென்றால் அதைவிட டிராஜடி வேறு உண்டா. அந்த படாடோபத்துக்காகவா அத்தனை கூட்டம்.