உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

131


திருக்குற்றாலம்

தென்காசி

12.5.50


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

அன்பான கடிதம் கிடைத்தது. மிக்க சந்தோஷம்.

காரைக்குடியில் நடந்த காரியத்தைப் பற்றிப் பலநாள் பேசவேண்டியதே ஒழிய கடிதத்தில் எழுத முடியுமா.

கணேசன் அபார முயற்சி எடுத்தார்கள். 5000 ரூபாய் செலவாயிற்று. பயன் இருந்தது. 10000 பேர் அல்லவா வந்திருந்தார்கள். பெண்டுகள் அதில் 2000 பேர். எல்லாரும் கம்பரைப் பற்றி ஏதாவது ரசமான விஷயம் சொல்லுவார்கள் கேட்கலாம் என்றே வந்திருந்தார்கள். தூரமான பெங்களுரிலிருந்து வந்திருந்தார்கள். நல்ல விஷயங்களைக் குறித்துச் சொல்லும்போது சந்தோஷப் பட்டார்கள். ராஜாஜி, கல்கி இருவரும் பக்தி சிரத்தையோடு பேசினார்கள். அந்த சிரத்தையுடனேயே கேட்டார்கள் சபையோர்கள். அவர்கள் இருவரது ஆத்திரத்தோடு கலந்து கொண்டார்கள் பதினாராயிரம் பேரும். அதுதான் விழா. அத்தகைய உணர்ச்சியையும், அறிந்து அனுபவிக்கும் தன்மையையும், முன் நடந்த எந்த கம்பர் விழாவிலும் நாம் பார்த்தது இல்லைதானே.

கம்பரை அனுபவரீதியாகப் புகழ்ந்து பாடினீர்கள் தாங்கள். தம்பி, முத்துசிவன், சுரபி எல்லாருமாக வெறும் செய்யுள் இயற்றும் காம்போஸிஷனாக இல்லை. நால்வர் பாடிய பாடல்களும். கம்பரது சிருஷ்டி அற்புதங்களைக் கண்டே அனுபவித்துப் பாடினீர்கள். எனக்கு எவ்வளவோ திருப்தியாக இருந்தது.