பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ரசிகமணி டிகேசி .

பாடல்களைக் கேட்ட சபையோரும் நால்வரோடும் கலந்து உற்சாக அலையால் மிதந்து கொண்டிருந்தார்கள்.

இத்தனை விதமாக சா. கணேசனுக்கு வெற்றி கிடைத்து விட்டது. மற்றபடி வித்வான்கள் என்னத்தைச் சொன்னால் என்ன. அதெல்லாம் சபையோரை பாதிக்கவில்லை. பெருநெருப்புக்கு ஈரம் இல்லை என்றுதான் இருந்தது.

வையாபுரிபிள்ளை அவர்கள் இடைச்செருகல் சம்பந்தமாகத் தலையையாவது அசைத்தார்கள், சீனிவாச ராகவாச்சாரியார் அவர்களுக்கு அதுவும் முடியவில்லை. அய்யோ பாவம், கம்பர் உயர்ந்ததுபோய்விட்டால் எவ்வளவு ஆபத்து.

கடிதத்தை கல்கி அவர்களும் மகாராஜன் அவர்களும் பார்த்துக் கொண்டார்கள். விஷயத்தைத் தெரிந்து கொண்டார்கள். கம்பர் பாடே அப்படி இருந்தால் நம் போன்றவர் என்னவாயிருக்கும் சொல்லவும் வேண்டுமா.

யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு வெள்ளி விழா மலர் வந்திருக்கிறது.

அதில் வையாபுரிபிள்ளை அவர்கள் பின்வருமாறு எழுதியிருக்கிறார்கள். சில உட்கதைப் பகுதிகளும் பெரிதும் ஐயத்திற்கு இடமாய் உள்ளன. உதாரணமாக ஏகி மன்னனை எனவரும் மிதிலைக் காட்சிகளும் செய்யுளுக்குப் பின் முனியும் தம்பியும் என்பவரை 56 செய்யுட்கள் ஒரு பழம் பிரதியிலும் இல்லை. இப்பிரதியில் மேலைச் செய்யுட்கள் காணாமையால் கம்பன் இயற்றிய மூலப்பகுதியில் இப்பகுதி உள்ளதோ என்பது பெரிதும் ஐயுறத்தக்கதே. பாட்டுக்களும் சுவை குன்றியுள்ளன என்பதை நாம் மறத்தல் ஆகாது. ஆனால் வித்வான் மாணிக்கம், அவரோடு மற்றப் புலவர்கள் சீனிவாசராகவன் ஆகியவர்கள் இதே ஆதாரத்தை எப்படி