கடிதங்கள்
133
ஒப்புக் கொள்ளுவார்கள். ஒப்புக்கொண்டுவிட்டால் கம்பனை மட்டந்தட்ட வேண்டும் என்று காரியம் நிறைவேறாமல் தானே போக நேரிடும். பிறகு கம்பன் ஒழிக. என்றுதானே கோஷம் போடவேண்டும்.
மேலே சொன்ன 56 பாடல்களையும் நாம் ஒதுக்கிவிட்டோம். வையாபுரிபிள்ளை அவர்களுடைய கரத்துக்கு அந்த ஏடு வருவதற்கு முன்னமேயே.
இதெல்லாம் போக எடுபட்ட பாடல்கள் வேறே. அதைக் கண்டு பிடிக்கிற காரியமோ முடியாத காரியம். ஆகவே கம்பரைக் கந்தலை ஒட்டி அலங்கோலம் ஆக்கினது மாத்திரம் அல்ல சதையையே ஆங்காங்கு பிச்சு வேறு எடுத்துவிட்டார்கள்.
கம்பரைக் கேவலமாக எண்ண இடம் இருக்கவே செய்கிறது என்றுதானே ஜனங்கள் எண்ணுவார்கள். காரைக்குடி கம்பர் விழாவில் கம்பரைக் கேவலப்படுத்திப் படேபடே வித்வான்கள் வாய்விட்டுப் பேசினார்கள். அவர்கள் மேல் என்ன குற்றம்? தமிழ் ஆர்வத்தில் செய்த பாவம் அப்படி
கலைக்கு எல்லா தேசத்திலும் எக்காலத்திலுமே தத்துவங்கள் உண்டு. தமிழ்க் கலையும் அப்படித்தான். ஆனாலும் தமிழ்க் கலைக்கு இப்போது புதிய உயிர்ச்சத்து பிறந்திருக்கிறது.
தமிழ் மக்கள் லட்சக்கணக்காகத் தமிழைக் கம்பரைத் தமிழ்ப் பண்பாட்டை அனுபவித்து வருகிறார்கள். நித்தியமான இடம் கிடைத்துவிட்டது தமிழுக்கு. கம்பர் காரியம் அப்படி கிடைக்கட்டும்.
மகாராஜன் அவர்களைத் தென்காசிக்கு மாற்றி ஆய்விட்டது. இனிமேல் தென்காசிக்குத் தெளிவு உண்டாகும்.