பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

ரசிகமணி டிகேசி


(iInfluenza) வந்து ரொம்ப கஷ்டப்படுத்திவிட்டது. நாலைந்து நாளாகக் காய்ச்சல் இல்லை. ஆனால் ஹீனம் இருந்து கொண்டிருக்கிறது. உடம்பு தேறுவதற்கு இரண்டு வாரம் செல்லலாம். இது காரணமாக ஊருக்குப் போவதை குறைந்தது இரண்டு வாரமாவது ஒத்திவைக்க ஏற்பட்டுவிட்டது.

தேசிக விநாயகம்பிள்ளை அவர்கள் பாடல்கள் அடங்கிய புத்தகத்தை இத்துடன் அனுப்பியிருக்கிறேன். அது நல்ல முறையில் அச்சிட்டு அழகுபெற கட்டிடம் அமைந்திருப்பதால் தங்களுக்கு மிக்க உவகையைக் கொடுக்கும். இதெல்லாம் செய்தது அடுத்த வீட்டு நண்பர் அருணாசலம் பிள்ளையவர்கள். அவர்களும் தம்பியும் மைத்துனரும் ரொம்பவும் தமிழில் ஈடுபாடுள்ளவர்கள். அவர்கள் ஒரே வளைவில் அடுத்த வீட்டில் இருப்பதால் இணை பிரியா நண்பர்களாய் இருக்கிறார்கள்.

இவர்கள் தேசிக விநாயகம் பிள்ளையவர்களோடு விடுவதாய் இல்லை. வருகிற மார்ச்சு மாதம் 18, 19 ஆம் தேதிகளில் கம்பர் விழாவினை கம்பர் பிறந்த ஊரான தேரழுந்தூரில் மிக விமரிசையோடு நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அவர்களுடைய உறவினரும் நண்பருமான சில மிராசுதார்கள் தேரெழுந்தூரிலேயே வசிக்கிறர்கள். அவர்களுக்கெல்லாம் கம்பர் விழாவை வெகு கோலாகலமாக நடத்தவேண்டும் என்று ஆசை. நம்முடைய வட்டத்தொட்டியைச் சேர்ந்தவர்கள் எல்லாரும் விழாவுக்கு வந்து சேரவேணும். தாங்கள் அவசியமானால் மார்ச்சு 20, 2! ஆம் தேதிகளையும் சேர்த்து விழாவோடு உபயோகித்துக் கொள்ளும்படி ஏற்பாடு இப்போதே செய்துகொள்ள வேண்டும். கல்கிக்கும் விழாவில் ரொம்ப ஆத்திரம். ஆகவே கம்பர் விழா என்றும் இல்லாத முறையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன்.