உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

ரசிகமணி டிகேசி


நிழல் அருமை வெயிலிலே நின்றறிமின். தாங்களும் கோவை பேரூர் எல்லாம் போய் வந்திருக்கிறீர்கள். நல்ல அனுபவந்தான். எட்டயபுரத்து நண்பர்கள் வேண்டிய மட்டும் கலவரம் விளைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாரதியார் எவ்வளவு நல்லவராய் இருந்தாலும், அரிய பாடல்களைப் பாடி இருந்தாலும், குற்றம் குற்றந்தான். அனாவசியமாக அல்லவா எட்டயபுரம் போய்ப் பிறந்து தொலைத்தார்.

இப்போது எட்டயபுரத்தில் தங்க நேர்ந்திருந்தால், அவர் பாடு ரொம்பக் கஷ்டமாய்ப் போய் இருந்திருக்கும். பாடாய்ப் படுத்தி யிருப்பார்கள் எட்டயபுரம் நண்பர்கள்.

லட்சக்கணக்கில் உதவி வந்திருக்கிறதே தங்களுக்கு என்பதைக் கொஞ்சமும் கருதியதாக இல்லை அவர்கள். நல்லதுக்குத்தான் பாரதிவிழாவை ஒற்றிப் போட்டிருக்கிறது.

ஆனால் ராஜபாளையம் நல்ல ஊர். ராஜபாளையத்திலேயே பிறந்திருக்கலாம் பாரதியார். தங்களை 17க்கு முன்கூட்டியே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். வீட்டில் அம்மாள், ராஜேஸ்வரிக்கு எல்லோருக்கும் என் அன்பு.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖