பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

139


முகாம்
கல்கி
சென்னை
7.11.50

அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தங்கள் அன்பான கடிதம் கிடைத்தது. தஞ்சாவூருக்கு வரவேணும் கவிக்குழாத்தோடு கலந்துகொள்ள வேண்டும் என்று எவ்வளவோ ஆசை. முக்கியமாகத் தாய்மார்களுக்குத் தமிழின் இனிமையும் பெருமையும் இப்படி என்று சொல்லி மகிழ வைக்கவேண்டும் என்று ஒரு போவார்.

ஆனால் என் உடம்பு கொஞ்ச நாளாக வம்பு பண்ணிக் கொண்டிருக்கிறது. இன்புளுவென்ஸா வந்து வந்து என்ன எல்லாமோ செய்கிறது. ரொம்பவும் பலவீனப்படுத்திவிடுகிறது உடம்பை. இதெல்லாம் காரணமாக என்னை மன்னித்துவிடவேண்டியதுதான். 2.12.50, 3.12.50 வாக்கில் தஞ்சைக்கு நான் வருகிறது என்பது முடியாத காரியம். எனக்கு ஏமாற்றமான காரியந்தான். அங்குள்ள நண்பர்களுக்குச் சொல்லவேணும். தினம் தினம் இன்ஸுலின் எல்லாம் போட்டுத்தான் ஆகிறது. தாங்கள் இருக்கும்போது எல்லாம் பிரமாதமாகத்தான் இருக்கும் சந்தேகம் இல்லை.

கோயம்புத்தூரில் ஒருவாரம் இருந்தேன். தமிழ்ப் பிரச்சாரத்துக்காகத்தான். முன்னமேயே எழுதிவிட்டேன். பெரிய கூட்டம் லெக்ச்சர் ஒன்றும் வேண்டாம், ஏதோ பத்தோ இருபதோ பேர் வந்து கேட்டால் போதும் என்பதாக. அப்படித்தான் வந்தார்கள், சாதாரணமாக ஐந்து பேர்தான். ஆர்.கே. சண்முகம் செட்டியார்கள் அவர்கள் ஒன்று, பழனிசாமி நாயுடு இரண்டு, பலராம் மூன்று, நடராஜன் நாலு, நான் ஐந்து. இதுதான் சங்கமம்.